Sunday, October 11, 2015

அவர்தான் கலைவாணர்





இனியும் நான் எழுதாமல் இருந்தால் அது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கே

>> செய்யும் அவமரியாதை என்று நினைக்கிறேன். நண்பர் சோழ. நாகராஜன் ஓராண்டுக்கு
>> முன்னால் என்னைச் சந்தித்து அவர் எழுதிய "அவர்தான் கலைவாணர்" என்கிற
>> புத்தகத்தைத் தந்தார். அவர் புத்தகம் தந்த அதே நாள் இரவிலேயே அதை நான்
>> படித்தும் விட்டேன். ஆனாலும், அதைப் பற்றி ஏன் எழுதாமல் இருந்தேன் என்று என்னை
>> நானே கேட்டுப் பார்க்கிறேன். பதில்தான் இல்லை.
>>
>> கலைவாணர் மீதான தீவிர ஈடுபாட்டால் அவரது பாடல்களை இசையுடன் பாடி, அவரது
>> வாழ்க்கை வரலாற்றை உரையாக வழங்கும் "இசை உரை" எனும் நிகழ்ச்சியை நடத்தி
>> வருகிறார் சோழ. நாகராஜன். கலைவாணர் பற்றிப் பல செய்திகளை அறிந்திருக்கிறேன்.
>> ஆனால், இதுவரை நான் அறிந்திராத பல செய்திகளைத் தாங்கி வெளிவந்திருக்கும் நூல்
>> "அவர்தான் கலைவாணர்".
>>
>> 100 படங்களில் நடித்திருக்கும் கலைவாணரால்தான், பஃபூன் என்று அலட்சியமாக கேலி
>> பேசப்பட்ட நகைச்சுவை நடிகர்களுக்குக் "கலைஞன்" எனும் உயரிய மதிப்பே ஏற்பட்டது.
>> எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, கலைவாணருக்கும் "சதி லீலாவதி"தான் முதல் படம்.
>> சொல்லப்போனால், எம்.ஜி.ஆரைக் கொடை வள்ளலாக்கிய பெருமை கலைவாணரைத்தான் சாரும்.
>> இவரைப் பார்த்து எம்.ஜி.ஆர். கற்றுக்கொண்ட பாடம்தான் அது.
>>
>> கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் எப்படி டி.ஏ. மதுரத்தைக் காதலித்துத் திருமணம்
>> செய்து கொண்டார் என்பது இந்தப் புத்தகத்தின் சுவாரசியமான பகுதி. கலைவாணரும்,
>> தியாகராஜ பாகவதரும் ஏன் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தது என்பது இந்தப்
>> புத்தகத்தின் நெஞ்சை உலுக்கும் பகுதி.
>>
>> "எப்போது ஒருவன் லாப நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படுகிறானோ அப்போதே அவனிடம்
>> இருக்கும் கலைத்திறமை போய்விடும்'' என்பாராம் கலைவாணர்.
>>
>> "50 வயதுக்கு மேல் உயிருடன் இருக்கக் கூடாது மதுரம். இருந்தால் சிரிப்புச்
>> சேவையும் கிழடு தட்டிவிடும். அதனால் 50 வயதுக்குள் இறந்துவிடப் போகிறேன்.
>> இப்போது எனக்கு இருக்கும் மதிப்போடு இறந்துவிடுவதுதான் மேலானது. தவிரவும், ஒரு
>> கலைஞன் தன் கலையெல்லாம் வறண்ட பிறகும் உயிரோடு இருப்பதுபோல ஒரு அவலம் உலகத்தில்
>> இல்லை'' என்பாராம் கலைவாணர் என்.எஸ்.கே.
>>
>> அவர் எண்ணியதுபோலவே, 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் நாகர்கோவிலை அடுத்த
>> ஒழுகினசேரியில் பிறந்த என்.எஸ். கிருஷ்ணன், 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம்
>> தேதி உலகில் தனது கலைப் பயணத்தை முடித்துக் கொண்டார்!


https://www.youtube.com/watch?v=VqNLXZxj9c0

>>
>> கலாரசிகன்
>>
>> நன்றி:- தினமணி
>>

0 comments:

Post a Comment

Kindly post a comment.