Monday, October 12, 2015

சமுதாய வலைத்தளங்கள்- சிக்கல்கள், சீரழிவுகள்

மனிதர்களின் கூட்டு இல்லாமல் சமுதாயம் உருவாக முடியாது. அதேசமயம் சமுதாயம் இல்லாமல் மனிதன் மனிதனாக வாழ முடியாது. சமுதாயத்தில் மனிதனின் பங்கு என்பது சமுதாய முன்னேற்றம் ஆகும். மனிதன் எவ்வாறு சமுதாயத்துடன் ஒன்றிணைகிறான் என்பது சக மனிதர்களுடான உறவே அதனைப் பற்றிச் சொல்கிறது.

 இந்தச் சூழ்நிலையில், இந்தச் சமுதாய வலைத்தளங்கள் சமுதாய நெறிமுறைக்கு அப்பாற்பட்டு இயங்குகின்றன. இந்தச் சமுதாய வலைத்தளங்களில் விரவிக் கிடப்பது ஆபாசக் குப்பைகளும், பொய்யான தகவல்களும்தான். கற்க கசடு அற என்கிறான் வள்ளுவன். ஆனால், இங்கு கற்கக் கிடைப்பதோ கசடுகள் மட்டுமே. கசடுகளைக் கற்று, எது வழி வாழ்க்கை நடத்த? வாழ்க்கையை மேம்படுத்த?

 சமுதாய வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கட்டணம் எதுவும் கிடையாது. பின்பு எப்படி இந்த வலைத்தளங்கள் இயங்க முடிகிறது என்று யாராவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? இல்லை என்றே முடிவுக்கு வர வேண்டியள்ளது, இச் சமுதாய வலைத்தளங்களின் அதிவேக வளர்ச்சியைப் பார்க்கும்போது. இந்தச் சமுதாய வலைத்தளங்களின் பயன்பா

 தேவைகள் இல்லாமலே இவ் விளம்பரங்களினால் ஈர்க்கப்பட்டு தேவை இல்லாமலே நேரத்தை விணாக்கி, காசையும் விரயம் செய்து பொருள்களை வாங்கி வீட்டில் முடக்கி வைக்க வழி செய்கிறது இந்தச் சமுதாய வலைதளங்கள். பணச் சேதம், பொருள் சேதம், நேரச் சேதம் மேலும் மனித உணர்வுகளையும் சேதப்படுத்தி, நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்று தங்களை வளர்த்துக் கொண்டுள்ளன இந்த சமுதாய வலைதளங்கள். இலவச சேவை என்ற பெயரில் சமுதாயத்திற்கு நோயினை பரப்புகின்றன. வள்ளுவன் இன்று இருந்திருந்தால் கள்ளுண்ணாமைக்காக குறள் எழுதியவன் இச்சமுதாய வலைதளங்கள் கள்ளைக் காட்டிலும் கொடியது என்று எச்சரித்திருப்பான். போதைப் பொருள்களை விடக் கொடிய போதை தரக் கூடியதாகவும் அதனைவிட மிகத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கின்றன சமுதாய வலைத்தளங்களுக்குச் செல்வதன் மூலமாக வருமானம் அடைகின்றன

 இந்தச் சமுதாய வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் வலைத்தளத்தில் பகிர்வு செய்தல், பிடித்தல் குறியிடுவதனால் துன்பத்தில் இருந்து அவர்கள் மீண்டு விடுவார்கள் என்று ஐயமுற நம்பி, அதனை மட்டும் செய்துவிட்டு வலையினுள் இருந்து விடுகின்றனர். ஒரு நிறுவனம் எப்படி தனது சேவையைக் கட்டணமே இல்லாமல் வழங்க முடியும். ஏன் வழங்குகின்றன என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை. இந்தச் சமூக வலைத்தளங்களின் போதையில் சிந்திக்கும் திறனும் இழக்கச் செய்து விடுகின்றன.

 மேலும், பொழுதுபோக்கு என்ற பெயரில் அநாகரிக செயல்பாடுகளும், தனி மனித அந்தரங்கங்களை வெளியிடும் வக்கிரப் போக்கும்தான் காணப்படுகிறது. நகைச்சுவை என்ற பெயரில் தனி மனிதனைக் குறி வைத்துத் தாக்கும் போக்கும் அதனை வளர்க்கும் போக்குதான் காணப்படுகிறது. மனிதனிடம் இருந்து நகைச்சுவை என்ற உணர்வை வற்ற வைத்த பெருமை இந்தச் சமூக வலைத்தளங்களையே சேரும். கேவலமாகப் பேசுவதுதான் நகைச்சுவை என்று ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கி, மனித சமுதாயத்தைப் பின்நோக்கி பயணிக்கச் செய்து உள்ளது.

 வீக்கம் என்பது வளர்ச்சி அல்ல. விவசாய நிலத்தில் களைகளின் அசுர வளர்ச்சி.. வளர்ச்சி அல்ல. இவை எதும் புரியாமல் வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்கின்றன. காலத்தின் போக்கில் பல தோன்றும். அதில் வளர்ச்சிக்கு உதவாதவைகளை நாம் தான் தெரிந்து முற்றிலுமாக அகற்றி விட வேண்டும். நஞ்சு என்பது ஒரு துளி என்றாலும் சரி ஒரு கோப்பை என்றாலும் நஞ்சு நஞ்சுதான்.

 அழகன் ரா திருப்பதி, கோவில்பட்டி.

நன்றி :- தினமணி


0 comments:

Post a Comment

Kindly post a comment.