Sunday, October 18, 2015

வினோத நட்சத்திர கூட்டம் கண்டு பிடிப்பு வேற்று கிரக வாசிகள் குடியிருக்க வாய்ப்பு விஞ்ஞானிகள் தகவல்!


வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு  பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம என்றே பதில் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் 'நாசா' மையம் விண்வெளியில் ஆய்வு நடத்த அதிநவீன சக்திவாய்ந்த 'கெப்லர்' என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் மறைந்து கிடக்கும் கிரகங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

அது போன்று சமீபத்தில் சில போட்டோக்களை அனுப்பி வைத்தது. அதில் ஒரு வினோதமான விசித்திர நட்சத்திர கூட்டம் போன்ற உருவ அமைப்பு உள்ளது. அது மிகவும் பிரகாசமான வெளிச்சத்துடன் இருக்கி றது.

இது நட்சத்திரமாக இருக்கலாம் என கருதி அதற்கு கே.ஐ.சி. 8462852 என பெயரிடப்பட்டுள்ளனர். இது குறித்து 'நாசா' விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண் டுள்ளனர்.
அதே நேரத்தில் அவை அயல் கிரகவாசிகளின் குடியிருப்பாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மிகவும் வெளிச்சமாக இருக்கும் பகுதி மின்சார நிலையங்களாக இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.

நன்றி :- தினத்தந்தி

0 comments:

Post a Comment

Kindly post a comment.