Sunday, September 27, 2015

ஆன்லைனில் வெளியாகும் குற்றம் கடிதல்!



தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் மகிழ்ச்சிவிக்க ஆன்லைனில் வெளியாக இருக்கிறது. பிரம்மா இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான படம் குற்றம் கடிதல். மாணவர்கள், ஆசிரியர்களுக்கான உறவை பிரதிபலிக்கும் படமாக வெளியாகியிருக்கும் இப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது. கோவாவின் பனோரமா மற்றும் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழா இவையிரண்டிலும் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுதான் எனலாம். ஆயிரத்தில் ஒருவன், ஆரண்ய காண்டம் படங்களுக்குப் பிறகு மும்பை திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மூன்றாவது தமிழ்ப் படம் இந்தப் படமே. மேலும் கலந்துகொண்ட விழாக்களில் சிறந்தப் படத்திற்கான விருதைப் பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் பல வெளி நாடு வாழ் மக்களின் பார்வைக்கும் நல்ல தமிழ் படங்கள் சேர வேண்டும் என்ற நோக்கில்

ஹீரோ டாக்கீஸ்.காம்

தமிழ் படங்களை ஆன்லைனில் நல்ல தரத்தில் , குறைந்த விலையில், மேலும் 5.1. சரவுண்டிங்கில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது குற்றம் கடிதல் படம் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. லிங்கா, உத்தம வில்லன், பாபநாசம், என்னை அறிந்தால், மாரி, மாஸ் போன்ற படங்களை அடுத்து தற்போது குற்றம் கடிதல் படம் இங்கு வெளியாகும் அதே நாளில் ஆன்லைனிலும் வெளியாகியுள்ளது.இந்த முறை திருட்டுத்தனமாக ஆன்லைனில் டவுன்லோடு செய்துப் பார்க்கும் பழக்கத்திற்கும் முடிவு கட்டும் என்பதில் சந்தேகமில்லை. 

’குற்றம் கடிதல்’ படத்தில் மூன்று புத்தகங்கள் குளோஸப் ஷாட்டாக காட்டப்படுகிறது.

ஒன்று : செழியனின் தாய்மாமன் ஒரு காட்சியில் மக்சீம்கார்க்கியின் ‘தாய்’ வாசிக்கிறார். இறுதிக்காட்சியில் மெர்லின் டீச்சருக்கு அந்நூலைதான் கையெழுத்து போட்டு பரிசளிக்கிறார்.


இரண்டு : மணிகண்டனின் எம்.டி. அவனுக்கு ’Men from mars, women from Venus' பரிசளிக்கிறார்.


மூன்று : செழியன் பள்ளியில் மயக்கம் போட்டு விழுகிறான். அவனை வேனுக்குள் தூக்கிச் செல்கிறார்கள். அப்போது பள்ளிவேனின் டேஷ்போர்டில் ‘வண்ணத்திரை’


y Blog List


  • ஆன்லைனில் வெளியாகும் குற்றம் கடிதல்!தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் மகிழ்ச்சிவிக்க ஆன்லைனில் வெளியாக இருக்கிறது. பிரம்மா இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள்...
    55 seconds ago

0 comments:

Post a Comment

Kindly post a comment.