Tuesday, April 7, 2015

மின்வணிகம் - பத்ரி சேஷாத்ரி , கிழக்கு பதிப்பகம்


எங்கள் அலுவலகத்தில் சென்ற வாரம் சேல்ஸ் மீட்டிங் நடந்தது. விற்பனை அணியில் மொத்தம் 16 பேர். நான்கு பேர் சென்னைக்காரர்கள். மீதம் 12 பேர் தமிழகத்தின் வெவ்வேறு நகரத்தில் இருப்பவர்கள் - கடலூர், வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, இப்படி நகரம் அல்லது அதை ஒட்டி இருக்கும் பகுதியாக இருக்கும். அவர்கள் மின்வணிகத் தளம்மூலம் பொருள்களை வாங்குகிறார்களா என்று ஒரு சின்ன ‘கருத்துக் கணிப்பு’ நடத்தினேன்.
  • அனைவரும் மொபைல் மூலம்தான் (3ஜி அல்லது 2ஜி) இணைய இணைப்பு பெறுகிறார்கள். வீட்டில் டி.எஸ்.எல் அல்லது ஃபைபர் இணைப்பு இல்லை.
  • 16 பேரில் 9 பேர் மட்டுமே இணையம் மூலம் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். மீதி 7 பேர் இதுவரை வாங்கியதில்லை.
  • இணையம் மூலம் பொருள்களை வாங்குபவர்கள் கணினி அல்லது மொபைல் இரண்டையும் பயன்படுத்திப் பொருள்களை ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
  • வாங்கியுள்ள அனைவருமே (9 பேருமே) COD முறைமூலம் மட்டுமே பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். ஒருவர்கூட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய முறைகளைப் பயன்படுத்தவில்லை.
  • அவர்கள் பொருள்களை வாங்கப் பயன்படுத்தியுள்ள தளங்கள்: flipkart.com,snapdeal.comzovi.comjabong.com ஆகியவை. இதுவரை ஒருவரும் amazon.comதளத்தில் ஒன்றையும் வாங்கவில்லை.
  • வாங்கியுள்ள பொருள்கள்: பென்-டிரைவ், மொபைல் போன், ஷூ, துணி ஆகியவை. (புத்தகங்களை ஒருவர்கூட வாங்கவில்லை:-)
  • வாங்குவதற்கான முக்கியக் காரணங்கள்: விலை மலிவு (ஆஃபர்), மொபைல் போன்றவற்றில் கிடைக்கும் ரேஞ்ச் (கடைகளில் காணக் கிடைக்காத பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன).
  • பிரச்னைகள்: COD முறையில் வாங்கும்போது பொருள்களைக் கொடுக்க வருபவர் பேக்கேஜைத் திறந்து பார்க்க அனுமதிப்பதில்லை. பணம் வாங்கிக்கொண்டு, டப்பாவைக் கொடுத்துவிட்டு உடனடியாக ஓடுவிடுகிறார். ஒருமுறை முற்றிலும் உடைந்த பொருள் ஒன்று உள்ளே இருந்தது... ஷூ அளவு சரியாக இல்லை. மாற்றுவதற்குபதில் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டேன்... இப்படி.
அடுத்து அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் விரிவான சில கருத்துக் கணிப்புகளைச் செய்யலாம் என்றிருக்கிறேன். மின்வணிகம், செல்ஃபோன் பயன்பாடு, இணையப் பயன்பாடு, ஸ்மார்ட்ஃபோன் குறுஞ்செயலிகள் பயன்பாடு... இப்படி.

 நண்பர்  பத்ரியின் எதார்த்தமான சிந்தனைப்போக்கு. 

தொடர்பிற்கு

பத்ரி சேஷாத்ரி  

0 comments:

Post a Comment

Kindly post a comment.