Wednesday, April 8, 2015

இலங்கை: தமிழ் மக்களின் மேம்பாட்டுக்கு புதிய திட்டம்


இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, தேசிய நல மையம் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலகம், கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
இலங்கையில் 30 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பெண்களும், குழந்தைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வடக்குப் பகுதியில் மட்டும் ஏறத்தாழ 50,000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.
உணவு, உறைவிடம், குழந்தைகளுக்குக் கல்வி ஆகியவை இல்லாமையால் அவர்கள் ஆதரவற்று வாழ்கின்றனர்.
போரால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களையும், பெண்கள் தலைமையிலான குடும்பங்களையும் முன்னேற்றுவதற்கான தேசிய நல மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கிளிநொச்சி நகரத்தில் இந்த மையம் செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் பற்றி ஐ.நா.சபை கவலை தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், அத்தகைய குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறியும் குழுவை ரணில் விக்கிரமசிங்கே ஏற்கெனவே அமைத்திருந்தார்.
நன்றி : தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.