Wednesday, April 8, 2015

உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் - அலேமாகோடோ

உலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் "ஒயிட் சாண்ட்' ஏவுகணை சோதனை மையத்தில், அந்த நிகழ்வின் 70-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள பரிசோதனை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்தனர்.
இதுகுறித்து "ஒயிட் சாண்ட்' சோதனை மைய செய்தித் தொடர்பாளர் எரின் டாரன்ஸ் கூறியதாவது:
70 ஆண்டுகளுக்கு முன் இங்கு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனை, உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது.
இரண்டாம் உலகப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர இந்தச் சோதனைதான் உதவியது என்றார் அவர்.
1945-ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, அலேமாகோடா நகருக்கு அருகிலுள்ள பகுதியில் உலகின் முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் பரிசோதித்துப் பார்த்தனர்.
அந்தப் பரிசோதனைக்கு "டிரினிட்டி' என அவர்கள் ரகசியக் குறியீட்டுப் பெயரிட்டிருந்தனர்.
அந்தப் பரிசோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அடுத்தடுத்து இரண்டு அணு குண்டுகள் வீசப்பட்டன.
அந்த அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவால் நிலைகுலைந்த ஜப்பான், அமெரிக்காவிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.
அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக, பல கோடி உயிர்களை பலிவாங்கி வந்த இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
அதற்கு வித்திட்ட "டிரினிட்டி' அணுகுண்டுப் பரிசோதனையை பலர் பாராட்டினாலும், அந்தப் பரிசோதனையினால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சில், சுற்றியுள்ள பகுதிகளில் பலர்
பாதிப்புக்குள்ளாகி வருவதாக "டுலாரோஸா படுகையின் பாதிக்கப்பட்டோர்' என்ற அமைப்பினர், சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
நன்ரி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.