Sunday, April 5, 2015

கனடாவில் 7 மில்லியன் டாலர்கள் செலவில் முருகனுக்குக்கோர் புதிய ஆலயம் ?கனடாவில் 7 மில்லியன் டாலர்கள் செலவில் முருகனுக்கு ஒரு புதிய ஆலயம் அமையப்போகின்றது

கனடாவில் ஸ்காபுறொ நகரில் 733 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் கடந்த பல வருடங்களாக இயங்கியவண்ணம் கனடா வாழ் முருகன் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் கனடா கந்தசுவாமி ஆலயம் தற்போது தற்காலிகமாக அதே வீதி இன்னுமொரு கட்டடத்தில் இயங்கிவருகின்றது. 

மேற்படி ஆலய நிர்வாகம் சொந்தமாகக் கொள்வனவு செய்துள்ள 733 பேர்ச்மவுண்ட் வீதி காணில் புதிய முருகன் ஆலயத்தை அமைக்கும் முகமாகவே இந்த தற்காலிக இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. தற்காலிகமான இடமாக இருந்தாலும் அந்த ஆலயமும் அனைத்து வசதிகளையும் கொண்டு ஒரு கலாச்சார மண்டபத்தையும் தன்னகத்தே கொண்டு சிறப்பாக இயங்கிவருகின்றது. ஆலய நிர்வாக சபைக்கு திருவாளர் முத்து சுப்பிரமணியம் தலைவராக இருந்து சிறந்த முறையில் ஆலய நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு உதவியாக சபையின் ஏனைய உறுப்பினர்களும் தொண்டர்களும் ஒத்தாசையாக செயற்பட்டு வருகின்றார்கள்..


733 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் உள்ள விசாலமான காணியில் ஒரு நிரந்தர ஆலயத்தை அமைக்கும் முகமாக மேற்படி ஆலயத்தின் நிர்வாக சபை மும்முரமாக ஈடுபட்டுவருகின்ற இவ்வேளையில் மேற்படி செயற்பாடுகளை பொது மக்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் அறிவிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க கூட்டம் நடைபெற்றது. ஆலய நிர்வாக சபையின் செயலாளர் திருமதி கலாநிதி குலமோகன் மேற்படி கூட்டத்தின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். புதிய ஆலய நிர்மானப் பணிகளில் பல வழிகளிலும் ஈடுபட்டு உழைக்கும் பல அன்பர்களும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் தங்கள் அனுபவங்களையும் பங்களிப்பையும் அங்கு எடுத்து விளக்கினார்கள்.

முக்கியமாக நிர்வாக சபையில் தலைவ ர் திரு முத்து சுப்பிரமணியம் அங்்கு ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகவும் பல முக்கிய தகவல்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேற்படி கனடா கந்தசாமி ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அதன் வளர்ச்சிக்காக உழைத்த பெருமக்கள், பல்வேறு சவால்களுக்கு இடையில் ஆலயம் நிமிர்ந்து நிற்க பல வழிகளிலும் உதவியவர்கள் என அனைவரையும் பெயரிட்டு குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்கள் அனைவரையும் மரியாதையோடு விளித்து சபையோரின் கரகோசத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

முக்கியமாக விரையில் 733 பேர்ச் மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் நிர்மானிக்கப்படவுள்ள புதிய ஆலயத்தின் கட்டட அமைப்பு தொடர்பாக அரசாங்க நிறுவ னங்களின் அனுமதி மற்றும் வரைபடங்கள் தயாரித்தமை போன்ற விடயங்களை அவர் தெளிவாக விளக்கினார்.


புதிய ஆலயம் சுமார் 7 மில்லியன் டாலர்கள் செ லவில் அமைக்கப்படவுள்ளதால் முருகன் அடியார்கள் அதற்காக செய்யவேண்டிய நிதி அன்பளிப்புக்கள் பற்றியும் அவர் குறிப்பிடத்தவறவில்லை.


மேற்படி கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட தமிழகத்தின் பிரபல ஆன்மீிகப் பேச்சாளர் கலைமாமணி திருமதி தேச. மங்கையர்க்கரசி அவர்களது உரை அனைவரையும் நன்கு கவர்ந்ததாக இருந்தது. குறிப்பாக மனிதராய்ப் பிறந்த நாங்கள் ஆலய கும்பாபிசேகம் ஒன்றைச் செய்தல் அல்ல்து அந்த புனிதமாக கைங்கரியத்தில் எம்மை ஈடுபடுத்தியோ அன்றி உள்வாங்கப்பட்டவராகவோ இருந்தால், அதனால் உண்டாகும் நன்மைகள் மற்றும் பலன்கள் ஆகியவற்றை மிகவும் தெளிவாக பல உதாரணக் கதைகளுடன் விளக்கினார்.


மேற்படி ஆலய திருப்பணி நிதிக்குத் தங்கள் அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் 1380 பேர்ச்மவுண்ட் வீதி என்னும் விலாசத்தில் அமைந்துள்ள தற்போதைய ஆலயத்திலும் ஒப்படைக்கலாம். அல்லது இணையத்தளம் மூலமாக நிதி அன்பளிப்பு வழங்க விரும்வோர் www.canadakanthan.ca என்னும் இணைய விலாசத்திலும் நிதி அன்பளிப்புக்களை வழங்கலாம்.

கனடா உதயன் செய்திப்பிரிவு
Like · Comment · 

0 comments:

Post a Comment

Kindly post a comment.