Wednesday, November 12, 2014

சத்தீஸ்கரில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 28 பெண்கள் பலி


சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் நடந்தது. இதில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் இறந்தனர்.
மேலும் 52 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சத்தீஸ்கர் மாநிலம்  பிலாஸ்பூர் புறநகரில் பென்தாரி கிராமத்தில் நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8-ம் தேதி நடந்த கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டனர். பெண்கள், அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்திற்குள் மருந்துகள் வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அவர்களில்  29 பெண்கள், வாந்தி மற்றும் வயிற்று வலி என பல்வேறு பிரச்சனை காரணமாக பிலாஸ்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த பெண்கள் 28 பேர் பலியாகினர்.
இதுகுறித்து டாக்டர்  அமர்சிங் கூறும் போது செப்டிக் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இருப்பினும், விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இறப்புக்கான சரியான காரணத்தை வெளிப்படுத்த முடியும். என்று தெரிவித்துள்ளார்
நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.