Wednesday, May 21, 2014

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் வீழ்ச்சி ஏன்?




இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, வீழ்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில தேர்தல்களில், அக்கட்சியின் செயல்பாடு மோசமாகவுள்ளது. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் 2014 பொதுத்தேர்தலும் வீழ்ச்சியை சந்திக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி, 1970 - 80 ஆண்டுகளில் 10 சதவீத ஓட்டுகளை வைத்திருந்தது. அது 2004ல் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது 5 சதவீதம் மட்டுமே பெறும் என தெரிகிறது.

பத்தாண்டுகளுக்கு முன், லோக்சபாவில் மூன்றில் ஒரு பங்காக 59 சீட்களை பெற்றிருந்தது. தற்போதைய தேர்தலில். இந்தியா முழுவதும் 14-20 இடங்களை மட்டுமே பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த பொதுத்தேர்தலில், 200க்கும் அதிகமான இடங்களை பிடித்து, பா.ஜ., ஆட்சி அமைக்க இருக்கிறது. பா.ஜ., வளர்ச்சியுறும் அதே நேரத்தில், இந்தியாவில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைகிறது.
மூன்றாவது அணி முயற்சி:

மூன்றாவது அணியை அமைத்து, இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி ஆசைப்படுகிறது. இதற்காக மாநில கட்சிகளுடன் இணைந்து செய்த முயற்சிகள், தோல்வியில் முடிந்தன. 1989ம் ஆண்டு முதல், கம்யூ., கூட்டணி 50க்கும் கூடுதலான இடங்களை மட்டுமே பெற முடிந்தது.
இந்தியாவில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைவதால், பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வருவது எளிதாகிறது. 

குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தக உறவு, உலக மயமாக்கல் வலுப்படுகிறது. இது யாருக்கு பலனளிக்கும் என தெரியவில்லை.
தற்போது சந்தை பொருளாதாரத்தில் மேற்கத்திய சார்பு அதிகம் இருக்கிறது. இடதுசாரிகளின் பொருளாதார தத்துவங்களே சிறந்தது என சில அரசியல்வாதிகளும், பொருளாதார மேதைகளும் கருதுகின்றனர். 

கம்யூனிஸத்தின் வீழ்ச்சியால், இந்தியப் பொருளாதாரத்தில் மேற்கத்திய சார்புகள் அதிகரிக்கலாம். மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான பொருளாதார கொள்கைகளை வலியுறுத்திய திரிணமுல் காங்., ஆட்சியை பிடித்தது. புதிதாக தோன்றியுள்ள ஊழலை எதிர்க்கும் ஆம்ஆத்மி கட்சியின் வளர்ச்சியும், கம்யூனிஸ்டுகளுக்கு பாதகமாக அமைந்துள்ளது. திரிணமுல், ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் சிறந்த இடதுசாரி தத்துவங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவை முதலாளித்துவத்துக்கு எதிராக செயல்படுவதில்லை. இந்த கட்சிகள், சர்வதேச அளவிலும் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

வீழ்ச்சிக்கான காரணங்கள்:

தற்போது திரிபுராவில் மட்டுமே கம்யூ., ஆட்சி நடக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 0.3 சதவீதம் மட்டுமே திரிபுரா கொண்டுள்ளது. மேற்குவங்கம், கேரளா மாநிலங்களில் கம்யூ., ஆட்சி செய்தது. அடுத்து அந்த மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான்.

கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள், பழமைத்தனமாக இருக்கின்றன. இந்தியாவில் உள்ள கம்யூனிஸட் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், 1974லிருந்து சோவியத் யூனியனை நினைவுபடுத்துகின்றன. நவீன இந்தியாவில் இந்த தத்துவங்கள் எடுபடுவதில்லை. இதுபோன்ற பல காரணங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்றன. இருப்பினும் கம்யூனிஸ்ட் முழுவதுமாக அழிய பல காலமாகும்.

- இந்துஸ்தான் டைம்ஸ் "மின்ட்' இணைப்பில் சதானந்த் தூமே

தினமலர்




0 comments:

Post a Comment

Kindly post a comment.