எனக்கு 74 வயது ஆகிறது. புராஸ்டேட் கோள வீக்கத்தால் அவதிப்படுகிறேன். என்ன மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம்?
- எம். மகாலிங்கம், சென்னை
ஆண்களுக்கு முதுமையால் வரும் மெல்லிய புராஸ்டேட் வீக்கத்தை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் தெரியும் அளவைப் பார்த்துப் பெரிதாய்ப் பயப்பட வேண்டியது இல்லை. அது இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும்போதும்,சிறுநீர் கழிக்கச் சென்றால் சில துளிகள் வந்து நின்றுவிட்டு, அடுத்த 20 நிமிடங்களில் மீண்டும் உந்துதல் வரும்போதும்தான் வேதனை.
இப்படிப்பட்ட அறிகுறி உள்ளவர்கள் பி.எஸ்.ஏ. எனும் prostate specific antigen அளவை சோதித்துக்கொள்வது கண்டிப் பாக நல்லது. இதன் அளவு, முதுமை புராஸ்டேட் கோளப் புற்று இருக்கும் வாய்ப்பை நமக்குச் சொல்லும். உணவில் வெள்ளைப் பூசணி, தக்காளிப் பழத்தோல், வெள்ளரிக்காய் விதை, சுரைக்காய் ஆகியவற்றைத் தொடர்ந்து எடுப்பது சாதாரணப் புராஸ்டேட் வீக்கம், புற்று வீக்கமாக மாறுவதைத் தடுக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். SAW PALMETTO எனும் பனைக் குடும்பத்துப் பழத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த வீக்கத்தைக் குறைப்பதை உறுதியும் செய்திருக்கின்றன.
75 வயதுக்கு மேற்பட்ட முதுமையில் இந்தக் கட்டி ஒரு வேளை புற்றாய் இருந்தால்கூடப் பிற புற்றுகள் அளவுக்கு வேகமாய் வளரக் கூடிய வாய்ப்புகள் இதில் கிடையாது. அதனால், அதன் வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கும் உணவையும், எளிய மூலிகை மருந்துகளையும் உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுப்பது உங்களை நலவாழ்வுக்கு இட்டுச் செல்லும்.
nalamvaazha@kslmedia.in
தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.