Thursday, February 6, 2014

தமிழில் வழக்காட உரிமை கோரி உண்ணாவிரதம்

தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: சீமான் பேச்சு

தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் பகத்சிங், எழில்அரசு, மாரிமுத்து ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கும் அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களை இன்று சந்தித்து வாழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் தமிழைப் பேச முடியவில்லை. எழுத முடியவில்லை. படிக்க முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. தமிழை ஐகோர்ட்டு வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

தமிழர்கள் பிரச்சினையை மத்திய அரசு கண்டு கொள்வது இல்லை. காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை போன்றவற்றுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை.

எனவே இந்தப் போராட்டத்தைப் பொதுமக்களிடம் எடுத்துச் சென்று தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியரசு எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பூமிநாதன், வீரதமிழ் செல்வன், மாநில மருத்துவர்அணி துணைச்செயலாளர் டாக்டர் சரவணன், சுப்பாராஜ் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களைச் சந்தித்தனர்.

மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.