Friday, December 6, 2013

வாடகைதாரர்கள் - உரிமையாளர்கள் விபரம் சேகரிப்பு சென்னைக்கு மட்டும்தானா /

வீடு வாடகைதாரர் விவரங்களை சமர்ப்பிக்க 60 நாள் கெடு

சென்னையில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் விவரங்களை 60 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் என பெருநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இது குறித்து பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூக விரோதச்  செயல்களில் ஈடுபடுவர்கள், சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வாடகைதாரர்களாகக் குடியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்போரின் தகவல்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடகைதாரர்களின், உரிமையாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை மாநகர் பகுதிக்குள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்களின் விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதற்கான உத்தரவை ஆணையர் எஸ். ஜார்ஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு 60 நாள்கள் அமலில் இருக்கும்.இந்த விண்ணப்பங்களை காவல் நிலையங்களில் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். வீட்டு வாடகைதாரர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

வீட்டு உரிமையாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கொரியர் அல்லது தபால் மூலமும் அனுப்பலாம் என அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                

தினமணி - 06-12-2013.                                                                


0 comments:

Post a Comment

Kindly post a comment.