Wednesday, December 4, 2013

அட்டப்பாடியில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா? கேரளா மறுப்பு


கேரள மாநிலம் மன்னார்காடு அருகே உள்ள அட்டப்பாடி பகுதியில் பல ஆண்டுகளாகத் தமிழர்கள் குடியிருந்து வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற கேரள அரசு முயற்சிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அறிக்கை அளித்ததால், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆதிவாசிகளின் நிலத்தை மீட்கப்போவதாக கூறி அட்டப்பாடியிலுள்ள தமிழ்க் குடும்பங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக-கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தித் தங்கள் பிரச்சினையை த்தீர்க்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள கேரள அரசு, அட்டப்பாடி பகுதியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழர்கள் யாரும் அச்சப்படதேவையில்லை என்றும், கஸ்தூரி ரங்கன் அறிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மன்னார்காடு பகுதித் தாசில்தார் அக்சல் தெரிவித்தார்.                                                                                                           

மாலை மலர் -  04 - 12 -2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.