Wednesday, December 4, 2013

20 ஆண்டுகளாகக் பஸ்வசதி இல்லை :. குன்றத்தூர் - படப்பை 20 கி.மீ. - தூரம்தான்.

 
குன்றத்தூர்-படப்பை இடையிலான 20 கி.மீ. தூரத்துக்கு அரசு பஸ் இயக்கப்படாததால், மாற்று வழியில் 2 பஸ்களை பிடித்து, 40 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலையில் குன்றத்தூர் ஒன்றிய பகுதி மக்கள் உள்ளனர். இதனால் நேரமும், பணமும் விரயமாகி வருவதாகவும், இப்பகுதியில் அரசு விரைந்து பஸ்களை இயக்க வேண்டும் என்று 22 ஆண்டுகளாக காத்திருக்கும் தங்களது கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குன்றத்தூர்-படப்பை இடையிலான 20 கி.மீ. தூரத்துக்கு அரசு பஸ் இயக்கப்படாததால், மாற்று வழியில் 2 பஸ்களை பிடித்து, 40 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலையில் குன்றத்தூர் ஒன்றிய பகுதி மக்கள் உள்ளனர். இதனால் நேரமும், பணமும் விரயமாகி வருவதாகவும், இப்பகுதியில் அரசு விரைந்து பஸ்களை இயக்க வேண்டும் என்று 22 ஆண்டுகளாக காத்திருக்கும் தங்களது கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குன்றத்தூர் ஒன்றியத்தில், குன்றத்தூர், மாங்காடு ஆகிய 2 பேரூராட்சிகளும், 42 ஊராட்சிகளும் உள்ளன. சென்னையை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, புது வாழ்வு திட்டம், வட்டார வள மையம், உதவி தொடக்க கல்வி பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் படப்பையில் இயங்கி வருகின்றன.

இதனால் குன்றத்தூர் ஒன்றியத்தின் தலைமை இடமாக படப்பை விளங்கி வருகின்றது. எனவே படப்பையில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், விண்ணப்பிப்பதற்கு குன்றத்தூர் ஓன்றியத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் படப்பை செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

பஸ் வசதியே இல்லை: குன்றத்தூர்-படப்பை இடையிலான 20 கி.மீ. தூரத்துக்கு அரசு பஸ் இயக்கப்படாமால் உள்ளது. இதனால் குன்றத்தூர், மாங்காடு ஆகிய பேரூராட்சி பகுதி மக்கள் மற்றும் கொல்லச்சேரி, சிக்கராயபுரம், ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட குன்றத்தூரைச் சுற்றியுள்ள 22 ஊராட்சிகளை சேர்ந்த மக்களும் படப்பைக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் பல வருட காலமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

குன்றத்தூரில் இருந்து படப்பைக்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால், குன்றத்தூரில் இருந்து 21 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்று, பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து 24 கி.மீ. தூரம் பயணம் செய்து படப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது.

அல்லது குன்றத்தூரில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள தாம்பரத்துக்குச் சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து, 17 கி.மீ. தூரம் பயணித்து படப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது. படப்பை சென்று வர சுமார் 80 கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது. குன்றத்தூரில் இருந்து படப்பை செல்லும் சாலைகளை பயன்படுத்தி படப்பை, ஓரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலை, கல்லூரிகளுக்கு பல ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து இருக்கும்போது அரசு பஸ் மட்டும் இந்த பகுதியைப் பாராமுகம் கொள்வதேன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த 1992-ஆம் ஆண்டு ஐயப்பன்தாங்கல் டிப்போவில் இருந்து குன்றத்தூர், சோமங்கலம், சேத்துப்பட்டு, புஷ்பகிரி வழியே படப்பைக்கு பஸ் இயக்கப்பட்டது. சில மாதங்களிலேயே சாலை வசதி சரியில்லை என பஸ் நிறுத்தப்பட்டது. அதன் பின் இப்பகுதியில் பஸ் இயக்க வேண்டும் என மக்கள் கடந்த 22 ஆண்டுகளாக போராடியும் எவ்வித பயனுமில்லை.

தற்போது இந்த பகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ., ஒன்றியக் குழு தலைவர் ஆகியோரிடம் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டு பிரயோஜனம் இல்லை வருந்துகின்றனர் மக்கள்.

தற்போது, குன்றத்தூரில் இருந்து படப்பைக்கு செல்ல பல சாலைகள் தரமாக உள்ளன. குறிப்பாக குன்றத்தூர்-சோமங்கலம் சாலை, நடுவீரப்பட்டு-மணிமங்கலம் சாலை, மணிமங்கலம்-படப்பை சாலைகள் கடந்த சில நாள்களுக்கு முன் மறு சீரமைக்கப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கின்றது.

 எனவே இந்த சாலையை பயன்படுத்தி குன்றத்தூரில் இருந்து படப்பைக்கு பஸ் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள்ளனர்.                                                                                        

தினமணி-04-12-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.