Sunday, December 1, 2013

வ.உ.சி. பேரனுக்கு ரூ. 2 லட்சம் உதவி: தூத்துக்குடி துறைமுகம் வழங்கியது

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பேரனுக்கு மருத்துவ சிகிச்க்காக ரூ.2 லட்சம் நிதியுதவி, தூத்துக்குடி துறைமுகம் சார்பில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

வ.உ.சி.யின் இரண்டாவது மகன் ஆறுமுகத்தின் மகன் ஆ.சங்கரலிங்கம் (80). உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாமல் இருந்துவருவதுகுறித்து, நவம்பர் 18-ஆம் தேதி "தினமணி'யில் செய்தி வெளியானது.

இந்த செய்தியைப் பார்த்த மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் உடனடியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாகத்தை தொடர்புகொண்டு சங்கரலிங்கத்தின்  மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, சங்கரலிங்கம் வசித்துவரும் விளாத்திகுளம் அருகேயுள்ள சின்னூர் கிராமத்துக்கு துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்தசந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

பின்னர், மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக துறைமுகம் சார்பில் ரூ.2 லட்சத்துக்கான  காசோலையை அவரிடம் வழங்கினர். மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்த துறைமுக நிர்வாகத்துக்கும், கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசனுக்கும் ஆ.சங்கரலிங்கமும் அவரது மகன்களும் நன்றி தெரிவித்தனர்.                                                        

தினமணி                                                                          



0 comments:

Post a Comment

Kindly post a comment.