Thursday, November 28, 2013

இங்கிலாந்து பிரதமருக்குப் பணிந்தது இலங்கை !


இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடந்த போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை இலங்கை அரசு துவக்கியுள்ளது.

இலங்கையில் நடந்த போரின் போது பல்லாயிரக் கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு அப்போது அசைந்து கொடுக்காத ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரங்களை இலங்கை அரசு பதிவு செய்யவில்லை என்றால், அதனை உலக நாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என்று கேமரூன் மீண்டும் எச்சரித்த நிலையில், போரின் போது இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியை இலங்கை அரசு துவக்கியுள்ளது.              

நன்றி ;- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.