திருருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே ஜோதி நகரைச் சேர்ந்தவர் தங்கையா என்பவரின் மகன் ராஜேந்திரன் (40). இவர் இன்று காலை குற்றாலம் நோக்கி வந்துள்ளார். அம்பையில் இருந்து குற்றாலம் செல்லும் பழைய குற்றாலம் சாலையில் மத்தளம்பாறை விலக்கு அருகே அவருடைய கார் எஞ்சின் ஓடிக் கொண்டிருந்த நிலையில், காருக்குள் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவருடைய காருக்குள் பத்திரங்கள், டாகுமெண்ட்கள் சிதறிக் கிடந்தன.
இது குறித்து விவரம் அறிந்த குற்றாலம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.