Thursday, November 14, 2013

திராவிடநாடு இதழில் வெளிவந்த இந்தி ஆட்சிமொழியான விந்தை கட்டுரையை கலைஞர் முரசொலியில் பிரசுரிப்பாரா?

போட்டித் தேர்வுகளில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது.

250px-SansadBhavan 

போட்டித் தேர்விலோ-நேர்முகத் தேர்விலோ-பள்ளி-கல்லூரித் தேர்வுகளிலோ இந்தியாவின் தேசீய மொழி இந்தி என்று பதில் கூறினால், மதிப்பெண் கிடைக்காது. ஆம்! இதுதான் உண்மை. 

தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் இந்தியும், எல்லோராலும் பரவலாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சி மொழிகள் என்பதுதான் உண்மை.

மஹாராஷ்டிரத்தில் ஆட்சிமொழி மராத்திதான், இந்தி இல்லை. அண்மையில், சமாஜ்வாடி எம்.எல்.ஏ. சட்டசபையில் பட்டபாடு ஊரறிந்த கதை. இந்தியோடு, இந்தியைப் போன்ற மொழிகளையும் சேர்த்துத்தான், இந்தியைப் பெரும்பான்மையாக்க முடிந்தது. 

அண்ணாவின் திராவிடநாடு பத்திரிக்கையில், அந்தக் காலத்தில், ‘இந்தி ஆட்சிமொழியான விந்தை” என்ற கட்டுரையைப் படித்தவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும்.

திராவிட அன்பர்கள் மத்தியிலும்செங்கோலோச்சுகின்றனர். அவர்கள் எடுத்து்ச் சொல்லி, இந்திக்குப் பெரு்ம்பான்மை இல்லை என நிரூபித்துவிடலாம். 

இந்தித் திணிப்பு என்ற ஒன்றே இல்லாமற் போகும். யாரும்போராடவும் வேண்டாம். எவரும் தீக்குளிக்கவும் வேண்டாம்.ஈழ மக்கள்பால் காட்டாத அக்கறையையா, இதற்குக் காட்டிவிடப் போகின்றர்கள்?

மூன்று தடவைகளாக நமது தேசீய அரசு (14+4+4=22) அங்கீகரித்தமொழிகள் மொத்தம் 22. அவையாவன: அஸ்ஸாமீஸ், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடா, காஷ்மீரி, கொங்கணி, மைதிலி, மலயாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

அவரவர் மநிலங்களில், அவரவர் விரும்பும் மொழியை ஆட்சிமொழியாக்கிக் கொள்ளலாம். இதுவே இன்று் நடைமுறை. சட்டமும் தடை சொல்வதில்லை.

வட இந்தியர் ஒருவர், தென்னிந்திய நீதிபதியாகப் பணியாற்றினால், அந்தமொழியை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும். இதே நிலைதான், வட இந்தியாவில் பணியாற்றச் செல்லும் தென்னிந்தியருக்கும். பணம்,காலம் விரயமாகும்.மாற்றுவழி என்ன? கண்டாக வேண்டும்

உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்கண்ட், உத்தராஞ்சல், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், இமாசலப்பிரதேசம், ஹரியானா, மற்றும் டெல்லி்-ஆகிய இடங்களில் மட்டும்தான் இந்தி ஆட்சி மொழியாக உள்ளது.

கொடி,சின்னம்,வாழ்த்துப்பா (anthem), பாட்டு (வந்தேமாதரம்), விலங்கு, பறவை, மலர், மரம், கனி, காலண்டர்- இவற்றில் தேசீயம் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. ஏனெனில்,அவை தன்னிச்சையாக இயங்காது

கடவுள் அளித்த முதல் அரு்ட்கொடையாகக் கருதப்படும் மொழியில் தேசீயத்தைக் காண இயலவில்லை.ஏனெனில்,பதவியைத் தக்க வைத்துக் கொள்வதே கோட்பாடாகக் கொண்டுவிட்டதால்,அரசியல்வாதிகளால், கட்சி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த முடிகின்றது. மக்கள் நலனில் அக்கறை காட்ட முடிவதில்லை. 

சிக்கலானவற்றைத் தீர்வு் காணாமல் கிடப்பில் போட்டு விடுகின்றனர். 60-62 ஆண்டுகளாகியும் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை. இந்தி பெரு்ம்பான்மை மொழி இல்லை என்று வற்புறுத்துவதில் நாட்டம் இல்லை.

செம்மொழியின் தொன்மைக் கால ஆண்டுகளைக் கோட்டை விட்டவர்கள் தானே இவர்கள்! ஆண்டுகளைக் குறைத்துக் காட்டினால்தான் இன்னு்ம் சில மொழிகளையும் காலப்போக்கில் செம்மொழிகளாக்கி அரசியல் நடத்த முடியும்.

கடலில் வீணாகும் கேரளத்து நீரைத் தமிழகம் பயன்படுத்த முடியாது… ஏன்? முல்லைப் பெரியாறு அணையில் சில அடி உயரம் அதிகமாக நீ்ரைத்தேக்கிவைக்கக்கூட இயலாது. 

வெல்ளையர் காலத்தில் கேரளப்பகுதியில் அணைகட்டி, தமிழகம் மேலாண்மை செய்யமுடிந்தது. ஆனால், தேசீய இந்தியாவில் ??? “வந்தேமாதரம்” தேசீயப்பாடலுக்கு எதி்ர்ப்புத் தீர்மானம் போடமுடிகின்றது.வெளியே நடமாடவும் முடிகின்றது.

கூகிளில், ஆட்சிமொழிக்கும், தேசீயமொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற கேள்வியைப் பார்த்தபின் திரட்டப்பட்ட தகவல்கள் 
இவையாகும்.

16-11-2009 திங்கள் (TOA) டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் இது குறித்த செய்தி வந்தது, துணயாகவும் இருந்தது.வலைத்தளங்களில் பல பகுதிகளில் இந்த விஷயம் பலவாறாகப் பரவிக் கிடக்கின்றது.

இத்தகவலைப் படி்ப்போர், தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தால் இஃது் முழுமைபெறும். தவறு்களைத் திருத்திக் கொள்ளவும் உதவும்.
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.