Friday, November 15, 2013

பெண்களைக் காப்பாற்ற தமிழக முதல்வரின் புதிய திட்டம்.


எங்கு திரும்பினாலும், எதைக் கேட்டாலும், பேசினாலும் நெஞ்சம் பதறுகின்றது.

பாலியல் தொந்தரவு செய்திகள் மிகவும் சாதாரணமாக நம்மைக் கடந்து செல்கின்றன.

தனித்து வாழும் வயது முதிர்ந்த வசதி படைத்த மூதாட்டிகள் கொலை செய்யப்படுவதும், தங்கச் சங்கிலிகள், தாலிச்செயின்கள் பறிப்பும் அன்றாட வாழ்வில்தொடர் நிகழ்வுகளாகிவிட்டன.

என்னதான் முன்னேறி விட்டோம் என்று நம்மை நாமே பாராட்டிக் கொண்டாலும், இதுபோன்ற நேரங்களில் பெண்கள் செயலிழந்துதானே போய்விடுகின்றனர்.

தமிழகக் காவல்துறை இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்ற ஒரு புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

"போலீஸ் ஹார்ட்" ... இதில் எல்லாப் பெண்களும் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

www.policeheart.com என்ற இணைய தளத்தில் விவரங்க்கள் உள்ளன. உங்களைப் பற்றிய விவரங்களை இதில் பதிவு செய்து விடவேண்டும்.

ஆபத்தான சமயத்தில் 1091 என்ற எண்ணை அழைத்தால் போதும். பேசக் கூட வேண்டாம். உங்களைக் காப்பாற்ற ரோந்துப் படையினர் விரைந்து வந்துவிடுவர்.

குறுஞ்செய்தி ( எஸ்.எம்.எஸ் )  மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்
HEART -என்று  டைப் செய்து  92271 21091 என்ற எண்ணுக்கு  SMS அனுப்பினால். போதும்.

 தகவல் உதவி:-

 ம.வான்மதி, 

ஆசிரியர், 

பாவையர்மலர் 

மாத இதழ்,

 pavaimathi@yahoo.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.