தலங்கள் வேறு. திருத்தலங்கள் வேறு. தலம் என்று இடத்தையே குறிப்பிடுகிறோம்.
சமஸ்க்ருதத்தில் ஸ்தலம் என்று அழைப்பது தான் தலம். எல்லா இடங்களையுமே நாம்
திருத்தலங்கள் என்று அழைத்து விடுவதில்லை. அப்படிப் பெயர் பெறுகிற இடங்கள்
தனி காநத சக்தி வாய்ந்தவை. அவை இயற்கையாகவே அமைந்திருக்கலாம். ஆண்கள்,
பெண்கள் என்ற இருபாலாராலும் அவர்களது கரங்கள்பட்டு நினைவுக்கு அப்பாற்
பட்ட காலத்திற்கு முன் அமைக்கப்பட்டிருக்கலாம்.
அவர்களுக்கு மட்டும் எப்படி அது சாத்தியமாயிற்று?
பூமியின் உள்ளே எப்போதும் அழியாது இருந்து வரும் உயிர் சக்தி,
தெய்வீக ஒளிவாய்க்கப் பெற்ற மனிதர்களின் மறைந்திருக்கும் ஆற்றல் இவற்றால்அது அவர்களுக்கு சாத்தியமாயிற்று. இந்த வழிகாட்டுதல் இருந்ததால் தான் அங்கே
ஒரு திருத்தலத்தை காணவோ தம் கரங்களால் அமைக்கவோ அவர்களுக்கு முடிந்தது.
அவற்றை நாம் ஏன் தேடிப்போகிறோம்?
அங்கே அறிவு, சக்தி, உள்ளத்தில் ஏற்படும் பிரகாசம் நிறைந்திருக்கிறது.தேடி
வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கக் காத்திருக்கிறது. காலம் காலமாக மக்கள்
அவற்றை நாடிப் போகிறார்கள்.
ஆனால் தேடுவதும், கிடைப்பதும் நபருக்கு நபர் மாறுபடுகிறது.
ஒருவருக்குப் பணம் தேவை.
இன்னொருவருக்கு பதவியோ பதவி உயர்வோ தேவை.
சிலருக்குக் காதலிக்கிற பெண் தேவை.மனைவி என்று ஒருத்தி இருந்தாலும்
மற்றொருத்தி மீது அடங்காத மோகம்.அவள் தேவை.
திருவொற்றியூரில் தியாகராஜரிடம் சென்று முறையிட்ட பரவை என்ற ஒருத்தியின் மையலில் மயங்கிய சுந்தரர் போல்.
திருவொற்றியூரில் தியாகராஜரிடம் சென்று முறையிட்ட பரவை என்ற ஒருத்தியின் மையலில் மயங்கிய சுந்தரர் போல்.
ஆயிரத்தில் ஒருவருக்கு ஆன்மீகத் தேவை.
லட்சத்தில் ஒருவருக்கு எதுவுமே தேவையற்ற மனச்சாந்தி தேவை.
எல்லாமே கிட்டுகிற தலங்கள் உண்டு.
ஆனால் அவை நாடிச் செல்கிற வரின் தாகம், தவிப்பு, மன ஒருமை, இதற்கேற்றவாறு வேறுபடும்.
அப்படிப்பட்ட தலங்கள் எதுவும் இல்லை. எல்லாம் கற்பனை.மனமயக்கம் தானே!
இப்படிச் சொல்கிறவர் கூட வேறு ஏதோ ஒரு தேவைக்கு ஆட்பட்டு அந்த மயக்கத்தில் அலைகிறவராகத்தான் இருக்கிறார்.
பூனைகளுக்கு கண்களை மூடிக்கொள்ளும் உரிமை உண்டு.
அதற்காகப் பூலோகம் இருண்டுவிடாது.
வையவனின் ஆன்மீகம்
0 comments:
Post a Comment
Kindly post a comment.