Wednesday, November 13, 2013

சதய விழா: பெருவுடையார் கோயிலில் பேரபிஷேகம்


மாமன்னன் ராசராச சோழனின் 1,028 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் திங்கள்கிழமை பேரபிஷேகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. காலை 7 மணியளிவில் மங்கள இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ராசராச சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், திருமுறை ஓதுவார் திருமுறைப் பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறை திருவீதி உலா நடைபெற்றது.

இதையடுத்து, அருள்மிகு பெருவுடையார், பெரியநாயகிக்கு 36-ம் ஆண்டு பேரபிஷேகம் நடைபெற்றது. இதில், விபூதி, திரவியப்பொடி, மஞ்சள், பஞ்சாமிர்தம் தேன், பால், தயிர், சந்தனம் என மொத்தம் 47 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.       

நன்றி :-தினமணி, 12-11-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.