Wednesday, October 2, 2013

பல கோடிகளுக்கு ஏலம் போகும் மருத்துவப் படிப்புகள் -நீதிபதி வேதனை !



தற்போது சில மருத்துவக் கல்லூரி களில் மருத்துவப் படிப்புகளுக் கான இடங்கள் பல கோடி ரூபாய்க ளுக்கு ஏலம் போவதாக செய்திகள் வருகின்றன என்று உயர் நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் வேதனை தெரிவித்துள்ளார்.

தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி சசிதரன் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கல்வி போதிப்பது என்பது ஒரு காலத்தில் பெரும் தொண்டாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது விரைவாக அதிக வருவாய் ஈட்டுவதற்கான தொழிலாக அது மாறிவிட்டது. மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மருத்துவப் படிப்புகள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வருகின்றன. 

நன்கொடை அளிப்பவர்களுக்கு மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகளுக்கான தேர்வுத் தாள் கூட முன்னதாகவே தரப்படுவதாகக் கூறப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லா மல் உள்ளன. 

பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் வழங்குவதும், தேர்வில் தோல்வி யடைந்த மாணவர்களை வெற்றி பெறச் செய்வதும் கூட சில நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களில் நடப்பதாக கூறப்படுகிறது. 

இதே நிலை தொடருமானால், டாக்டரைச் சந்திக்கச் செல்லும் நோயாளிகள் அந்த டாக்டர் உண்மையிலேயே மருத்துவம் படித்தவர்தானா என்பதை உறுதி செய்ய அவரது சான்றிதழை வாங்கி சரிபார்க்கும் நிலை ஏற்படலாம். 

ஆகவே, மத்திய, மாநில அரசுகளும், இந்திய மருத்து வக் கவுன்சிலும் மருத்துவக் கல்வி முறையை ஒழுங்குபடுத்த உடனடியாக உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

தி இந்து -02-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.