Friday, October 4, 2013

காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் பெல்லோஷிப் திட்டம்




உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்ள இந்திய மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சம் உதவித்தொகை வழங்குகின்றது.
கல்வித்தகுதி: இந்த உதவித்தொகையை பெற மூன்றாம் நிலை கல்வியை ஆங்கிலத்தில் முடித்திருக்க வேண்டும். அதாவது எம்.பில் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை படிப்புக்கு உதவித்தொகை பெற இளங்கலை படிப்பில் (மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாயம்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள்  யுகே.,வில் கள ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் வாய்ப்பு அளிப்பதோடு, உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்விச் சான்றிதழ்கள் இணைத்து Ministry of Human Resource Development, Department of Higher Education. External Scholarship Division. ES.4 Section, West Block-1, Wing-6. 2nd Floor, RKe Puram, New Delhi - 110 66 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்ய அக்.,6 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு அக்.,11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு www.mhrd.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி, 04-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.