Sunday, October 13, 2013

"சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு'! - மிஷல் தனினோ

வேதங்களிலும், மகாபாரதத்திலும் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி இப்போது எங்கே? கங்கையும் யமுனையும் பூமிக்கு மேலே பாய, சரஸ்வதி நிலத்தடி நீராகப் பாய்ந்து கொண்டிருக்கிறது என்று கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன.

ஆனால், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சரஸ்வதியை மறுகண்டுபிடிப்பு செய்ததையும், சிந்து சமவெளி நாகரிகம் என்பதே உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகம்தான் என்பதையும் எடுத்துரைக்கிறது

 மிஷல் தனினோ எழுதியிருக்கும் 

"சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு'!

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தன. அதன் வடமேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்கியது. கூடவே, மண் அரிப்பும், நிலநடுக்கங்களும் சேர்ந்து கொண்டன. அந்தப் பகுதியில் பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாகத் திசை திரும்பின. அப்போது, என்றென்றைக்குமாக சரஸ்வதி நதி மறைந்துபோனது.

புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஆகியவை சரஸ்வதி நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துத் தந்திருக்கின்றன.

ஐúஸாடோப் ஆய்வுகள் சரஸ்வதி நதியின் புராதன நீர்தான் பாலைவனத்தில் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த விவரங்களையும், சம்ஸ்கிருத இலக்கியங்களில் சொல்லப்பட்ட விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், இன்றைய
கக்கர் - ஹக்ரா நதியின் படுகைதான் பண்டைய சரஸ்வதி நதியின் படுகை என்று கருத இடமிருக்கிறது.

 "காணாமல்போன நதி' மீண்டும் கிடைத்துவிட்டது. ஆனால் அது ஏன், எப்படி வறண்டது? அது கடலில் நேரடியாகக் கலந்ததா அல்லது சிந்து நதியின் கிளை நதியாக மாறிவிட்டதா என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

சரஸ்வதி நதியின் மறைவுக்குப் பின்னால் சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு மறைந்து கிடக்கிறது என்பதாலேயே, இந்தப் புத்தகம் வரலாற்று ஆராய்ச்சியிலும், மனித நாகரிக வளர்ச்சியிலும் அக்கறை உள்ள அனைவருக்கும் அரிய பல தகவல்களை மட்டுமல்ல, ஆய்வு முடிவுகளை பார்வைக்கு வைக்கிறது.

பக்கத்துக்குப் பக்கம் மிஷல் தனினோவின் உழைப்பும், தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் ஒன்றுவிடாமல் தொகுத்தளிக்க வேண்டும் என்கிற முனைப்பும் தெரிகிறது.

தமிழில் மொழிபெயர்த்திருக்கும் வை. கிருஷ்ணமூர்த்தி பற்றி ஒரு வார்த்தை - மொழிபெயர்ப்பு என்கிற உணர்வே தராத நடை. சில புத்தகங்களைப் படிக்கும்போது, ஆங்கில மூலத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்போம். 

இந்தப் புத்தகத்தில் ஆங்கில மூலம் இந்த அளவுக்குத் தெளிவாக இருக்குமா என்பது சந்தேகம். கொஞ்சம்கூட இடரல் இல்லாத அற்புதமான மொழிபெயர்ப்பு!                                                                                                                            

 தினமணி இந்த வாரம் பகுதியில் கலாரசிகன் அறிமுகப்படுத்தியுள்ள நூல்

தினமணி- 13-10-2013

மின்தமிழ்க்  குழுமத்திலிருந்து :-

seshadri sridharan
13:46 (8 hours ago)

to mintamil
Boxbe This message is eligible for Automatic Cleanup! (sseshadri69@gmail.com) Add cleanup rule | More info

இது ஒரு ஆரிய - வேத சார்பாளர்களின் பெருத்த மோசடி.
மத்திய பிரதேசம், இராசத்தான் ஆகிய பகுதிகளில் தோன்றி உருவான இரு வெவ்வேறு ஆறுகள் உத்திரபிரதேசத்தை நோக்கி  ஓடி பிராகைக்கு தெற்கே ஒருங்குகூடி ஒரு பேர் ஆறாக உருப்பெற்று சரசுவதி எனும் பெயரில் பிரயாகையில் யமுனையோடும் கங்கையோடும் இணைந்தது என்பதே மெய் வரலாறு.
ஆயினும் சிந்து நாகரிகத்தை ஆரிய, சரசுவதி நாகரிகமாகக் காட்டும் மைக்கேல் தனினோ, கலியாணராமன்  போன்றோர் இந்த சரசுவதி ஆறு சிந்து நாகரிக தளங்கள் அமைந்த இராசத்தான் குசராத்து பகுதிகளில் ஓடி அந்த நாகரிகங்களின் செழுமைக்கு வளம் கூட்டி  அரபிக் கடலில் கலந்ததாக காட்டி சிந்து நாகரிகத்தை  ஆரியரின் வேத நாகரிகமாகக் காட்ட முனைந்துள்ளனர். இது தமிழர் நாகரிக வரலாற்றைத் திரிக்கும் பெருத்த ஆரியமோசடி என்பதை தமிழர் எல்லாரும் புரிந்து கொள்ள வேணடும். புராணக் குறிப்புகள் கூட சரசுவதி ஆறு பிரயாகையில் ஓடியதாகத் தான் குறிப்பிடுகின்றன. உண்மையில் இமாச்சல பிரதேசம் தொடங்கி கட்சு வரை 1,500 கி. மீ. பாய்ந்த ஆற்றுக்கு வேறு பெயர் வழங்கியிருக்க வேண்டும் சரசுவதி என்ற பெயர் அதற்கு வழங்கியிருக்க வாய்ப்பில்லை. 
சிந்து நாகரிகத்தை ஆரியமாகக் காட்டும் இந்த முயற்சி முந்தய பாரதீய சனதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து மீண்டும் அதன் ஆட்சி அமையுமானால் பாட நூல்களிலேயே அதை சரசுவதி என்று துணிந்து போட்டிடுவர்.
In ancient times there were two rivers, Carmańvatii and Drśadvatii, in central India. The history behind the name of the river Carmańvatii is this: When the Aryans were living in the Rajasthan area in the western part of India, they found many animals there, because there were forests and sufficient rainfall. They used to perform sacrificial rites by killing these animals. There is a story that once they performed a sacrificial ritual killing hundreds of thousands of animals; the heaps of those animals’ skins was as high as a mountain, and blood streamed down unceasingly from that pile of skins. It looked as if a river was flowing. After a long distance, this stream of blood flowed into the Ganges River. As the stream of blood flowing from the pile of animal skins took the form of a river, it was named Carmańvatii in Sanskrit. The present name of the river is Chambal.

Then there was another river, Drśadvatii by name. This river originates from the Vindhya Mountain in the Bákhelkhańd́a area, and flows northwards towards the Ganges. Drśad in Sanskrit means “pebbles”. As the river was full of pebbles, the people called it “Drśadvatii”. This river used to flow northwards, and the Carmańvatii used to flow towards the east. Further on, they used to meet at a point south of Prayaga, and then they used to flow together past Kaoshámbii, into the Ganges near Prayaga. The combined flow of the two rivers, Carmańvatii and Drśadvatii, became known as Sarasvatii.

Perhaps you know that many ruins have been discovered at this Kaoshámbii. Many archaeological relics of the days of King Harśavardhana of Sthániishvar have been found there. The first seal in Bengali script, used by King Harśavardhana, was found here at Kaoshámbii.

Now, as the river Yamuna flowed from the west, the river Ganges, or Gauṋgá, from the northwest, and the river Sarasvatii from the south, and the three rivers met at Prayaga. But once there was a tremendous earthquake in central India, as a result of which the Carmańvatii River could no longer flow eastward; so the Carmańvatii River, instead of flowing eastward, flowed into the Yamuna River. The Chambal River these days flows directly into the Yamuna. The Drśadvatii River cannot meet the Chambal River in the north either, and instead flows towards the northeast and empties into the river Shon. The combined flow of the Carmańvatii and Drśadvatii which made up the river Sarasvatii is dry now. So now only two rivers instead of three meet at Prayaga.

Anyway, the modern name of the Drśadvatii is Ghághar or Ghághrá. If any of you go to Rewa city, you will find there the Drśadvatii River, which took a new name, Gharghará, which means that the water of the river emits a rough sound, because it contains large rocks and pebbles. This Sarasvatii River watered arid Madhya Pradesh, as a result of which this area – the northern part of Bákhelkhańd́a – became fertile. So people out of reverence used to call it a goddess. This is the Vedic river Sarasvatii;
from the book  All bask in the glory of siva -2 (discource 7) Namah Sivaya santaya by Ananda Murthi 


சேசாத்திரி 

யாரைத்தான் நம்புவதோ  ? 

Subashini Tremmel
13:10 (8 hours ago)


to மின்தமிழ்
னூல் அறிமுகப் பகிர்வுக்கு நன்றி.

இது தொடர்பாக..

சரஸ்வதி நதி பற்றி நம் த.ம.அ நண்பர்கள் இணைந்து மேற்கொண்ட ஒரு பதிவாக திரு.கல்யாணராமணின் பேட்டி, படங்கள்.. பாயும் சரஸ்வதிக் கரையினிலே.
சுபா

0 comments:

Post a Comment

Kindly post a comment.