Saturday, October 12, 2013

ஓபிசிடபிள்யூ அமைப்பின் வரலாறு

 


உலகில் ரசாயன ஆயுதங்கள் பரவலைத் தடுப்பதற்கு 1993, ஜனவரி 13-இல் ஐ.நா., சர்வதேச உடன்படிக்கையை மேற்கொண்டது. இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்தும் விதமாக 1997-இல் ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு, தடுப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையிடம் ஹாலந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் அந்த அமைப்பு உலகம் முழுவதும் 57,000 டன் ரசாயன ஆயுதங்களைக் கண்டுபிடித்து, அவற்றை அழித்துள்ளது.

சிரியாவில் அண்மையில் அரசுப் படைக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அப்போது, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களை அந்நாட்டு அரசுப் படை கொன்று குவித்தது என்பதை ஓபிசிடபிள்யூ அமைப்புதான் கண்டுபிடித்தது.

இதையடுத்து, சிரியாவின் மீது படையெடுக்க அமெரிக்கா ஆயத்தமாகியது. இதனால், அச்சமடைந்த சிரியா, தன்வசம் ரசாயன ஆயுதங்கள் இருப்பதை ஒப்புக்கொண்டது.

 மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, 2014-க்குள் தன்வசமுள்ள ரசாயன ஆயுதங்களை முற்றிலும் அழிப்பதற்கும் சிரியா சம்மதம் தெரிவித்தது.

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததன் மூலம் உலக அமைதிக்கு ஓபிசிடபிள்யூ அமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                    

தினமணி- 12-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.