தக்க பின்புலம் இல்லாமல் ஊழலை
எதிர்த்துப் போராடாதீர்கள் !
பீகாரில் ஓர் சமூக ஆர்வலரின் உண்மை நிகழ்வு ! ஊழலை எதிர்த்த ஷம்பூ பிரசாத்தின் நிலை !
அவரது வயது 45. பீகாரின் நவாதா மாவட்டத்தச் சேர்ந்தவர். இவர் ஒரு சமூக ஆர்வலர். கடந்த பத்து ஆண்டுகளாக அந்த மாவட்டத்தில் ஊழலை எதிர்த்துப் போராடி வருகிறார். சிலர் இவரை "ஜே.பி." என்றும், சிலர் இவரை "அண்ணா" என்றும் அழைக்கின்றனர். ஊழலை எதிர்த்து இவர் குரல் கொடுத்ததால், இவருக்கு பெருத்த பாதிப்பு ஏற்பட்டது.
அதைவிட பெரிய பாதிப்பு இவர்மீது பொய்க் குற்றங்கள் சுமத்தி, காவல்துறை மாட்டி விட்டது. செய்யாத குற்றத்திற்காக ஷம்பூ பிரசாத் 31 மாதங்கள் சிறைவாசம் இருக்க நேர்ந்தது.
இவர் வசிக்கும் நவாதா மாவட்டத்தின் சி.ஜே.எம். மற்றும் ஏ. எஸ்.பியுடன் சேர்ந்து பல சிறந்த அதிகாரிகளின் நடவடிக்கைகளைப்பற்றி முதலமைச்சரின் பார்வைக்கு வைத்ததுதான் இவர் செய்த குற்றம்.
முதலமைச்சரிடம் புகார் செய்ததால், காவல்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வன்மத்துடன், ஷம்பூவின் மீது தங்கள் அதிகார பலத்தைக் காட்டத் துவங்கினர்.
அரசாங்கத்துறை எண் 6 / ஆ.99 / 2009 விதியின்படி, ஷம்பூவை சாட்சிகள் சேகரித்துத் தருமாறு கூறியது. அதன் பிறகுதான் துவங்கியது அவரது போராட்டம்.
ஷம்பூவின் மேல் பலாத்காரக் குற்றமும், பழங்குடியினரை அடக்கி வைத்ததாகவும் குற்றம் சாட்ட்டப்பட்டு
( வழக்கு எண் 86 / 2008 ) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஷம்பூ உடனே பாட்னா உய்ர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் ( எண் 621 / 2008 ) தாக்கல் செய்தார்.
வழக்கு தொடர்பாக அவர் பாட்னா வந்தபோது, அங்கு சாதாரண உடையில் இருந்த நவாதா காவல்துறையினர் அவரைக் கைது செய்து ரிமாண்டில் எடுத்து அவரை அடித்துத் துன்புறுத்தினர்.
19 வயதான விதவை மம்தாதேவி ( கணவர் பெயர் பலிராம் ) மே 15-ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டு , காவல் நிலையத்தில் ஒரு புகார் ( பகுதி எண் 485 / 2008 ) பதிவு செய்தார். 11-ஆம் தேதி அவர் ரஜெளலியிலிருந்து நவாதா சென்று கொண்டிருக்கும்போது, ஷம்பூ அவரை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். இதை வெளியே யாரிடமாவது சொன்னால் , அவளின் குடும்பத்தையே அழித்து விடுவதாக ஷம்பூ மிரட்டியதாகக் கூறினார்.
விதவையான மம்தாதேவியின் புகாரின் அடிப்படையில் ஐ.பி.சி. 376 விதியின் கீழும், எஸ்ஸி மற்றும் எஸ்டி ஆக்டின் விதி எண் 3-ந் கீழும் ஷம்பூ மீது வழக்குத் தொடரப்பட்டது.
பொய்யான பலாத்கார குற்றத்தை எதிர்த்து, ஷம்பூ நியாயம் கேட்டு பல கதவுகளைத் தட்டினாலும், அவரிடம் என்ன என்று கேட்கக் கூட ஆளில்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் 31 மாத சிறைவாசத்திற்குப் பிறகு,
ஏப்ரல் 21, 2011 ஆண்டு நவாதா நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுவித்தது.
எந்த மம்தாதேவி, ஷம்பூவின் மீது குற்றம் சுமத்தினாரோ, அவரின் இயற்பெயர் மீனா தேவியாகும் என்று நவாதா நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார். 31 வயதான இந்த மீனாதேவியின் கணவர் பெயர் சமேரியா பாஸ்வான்.
நீதிமன்றத்தில் அவர் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படுவதை மறுத்தார். குற்றவாளிக் கூண்டில் நின்ற ஷம்பூ பிரசாத்தை அவரால் அடையாளம் காட்டமுடியவில்லை. அவர் நீதிமன்றத்திற்கு எப்படி ஏன் வந்தார் என்று கேட்டபோது, அவர் தனக்கு நீதிமற நோட்டீஸ் கிடைத்ததாகக் கூறினார்.
கீழ்க் கோர்ட்டுகள் எந்த விசாரணையையும் மறுத்துவிட்ட போதிலும் உயர்நீதிமன்றத்தில் பொய்க்குற்றம் சுமத்தியவர்கள் மீது விசாரணை செய்வதற்காக மனு போட்டுள்ளார் ஷம்பூவின் வழக்கறிஞரான இந்திரதேவ் பிரசாத்.
நவாதாவின் சி.ஜே.எம்மிடம் பொய்வழக்கு போட்டவர்களை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படத்துள்ளது உயர்நீதிமன்றம். இதனால் பல அதிகாரிகள் சிறை செல்லக் கூடும்.
.
நன்றி:- சரஸ் சாரல் , அக்டோபர்,2013 ( 191 -வது இதழ் )
இந்தி, குஜராத்தி, மராத்தி, தமிழ், ,தெலுங்கு மொழிகளில் உலாவரும் மாத இதழ்.
தொடர்பு முகவரி :-மண்டல அலுவலகம், சிசன்ஸ் காம்ப்ளக்ஸ், முதல்மாடி,
2 / 92 மாண்டியத் சாலை, சென்னை, 600 008.
மின்னஞ்சல் :- grihshobha.chennai@delhipress.biz
தொலைபேசி :- 044- 28412161

0 comments:
Post a Comment
Kindly post a comment.