Friday, October 11, 2013

கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு, தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து கனடாவை சேர்ந்த பெண் சிறுகதை எழுத்தாளர் அலைஸ் மன்றோவுக்கு (வயது 82). இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

கனடாவின் ‘செக்கோவ்’ என்று அழைக்கப்படும் இவரது சிறுகதைகளில், சமூக அங்கீகாரத்துக்காக ஏங்கும் நலிந்த பிரிவினரின் ஏக்கங்களை உண்மைத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்தியமைக்காக பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழுவினர் தெரிவித்தனர். மேலும் இவரை ‘சமகாலத்து சிறுகதை வல்லுனர்’ எனவும் பாராட்டினர்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 13–வது பெண் எழுத்தாளர் அலைஸ் மன்றோ ஆவார். மேலும் இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் கனடா நாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சுமார் ரூ.8 கோடி பரிசாக கிடைக்கும்.

தினத்தந்தி - 10-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.