Saturday, October 19, 2013

25 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை இழந்தவர் கூகுள் மேப் மூலம் இணைந்தார்




சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடுத்தை விட்டுப் பிரிந்த நபர், தனது ஞாபகத்தில் இருந்த வீட்டின் அடையாளத்தை வைத்து கூகுள் மேப் மூலமாகத் தேடி தனது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் வசித்து வந்த சரூ பிரேர்லே (31) தனது 6வது வயதில் தவறான ரயிலில் ஏறி சுமார் 100 மைல்களுக்கு அப்பால் சென்று விட்டார். அவரை ரயில்வே காவலர்கள் அனாதை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் அவரை தத்தெடுத்துச் சென்று வளர்த்து வந்தது.

தற்போது ஆஸ்திரேலியாவில் ஒரு தொழில் அதிபராக உள்ள பிரேர்லே, தனது இருப்பிடம் குறித்து தனக்கிருந்த ஞாபகத் திறனைக் கொண்டு கூகுள் மேப் மூலமாக அவரது வீடு எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொண்டார்.

பிறகு, இந்தியா வந்து, தான் தவறுதலாக இறங்கிய ரயில் நிலையம் கொல்கட்டா என்பதை அறிந்து, அங்கிருந்து அவரது சொந்த ஊரைக் கண்டுபிடித்து தனது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார். அதோடு நின்று விடாமல், தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தை புத்தகமாகவும் எழுதியுள்ளார் பிரேர்லே                                                                                                       

தினமணி - 19 -10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.