Thursday, October 3, 2013

2050-இல் மக்கள் தொகையில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கும் !





சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள்தொகையுடன் இந்தியா 2050-ல் முதலிடம் வகிக்கும் என்று பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது.

பிரெஞ்சு மக்கள்தொகை ஆய்வுகள் நிறுவனத்தின் தகவல்படி 2050ஆம் ஆண்டு 1.6 பில்லியன் மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடம் வகிக்கும்.

மக்கள்தொகையில் தற்போது முதலிடம் வகிக்கும் சீனா 1.3 பில்லியன் மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படும்.

உலக மக்கள்தொகையானது தற்போதுள்ள 7.1 பில்லியனில் இருந்து 9.7 பில்லியனாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் தற்போது 1.3 பில்லியன் மக்கள்தொகையுடன் சீனா முதலிடத்திலும், 1.2 பில்லியனுடன் இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளன.                                                                                 


0 comments:

Post a Comment

Kindly post a comment.