Thursday, August 15, 2013

J & K இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரச்சினையா ? இல்லை !



ஜம்மு - காஷ்மீரில், ஏராளமான இஸ்லாமியர்களின் பாதுகாப்புடன் ஒரு இந்துவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
எங்கு இந்துக்களும், இஸ்லாமியர்களும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று நம் கருதி வருகிறோமோ, அங்கு ஒரு இந்துவின் திருமணம் ஏராளமான இஸ்லாமியர்களின் பாதுகாப்போடு நடைபெற்று முடிந்திருப்பது அங்கு வாழும் மக்களின் ஒற்றுமைக்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறது.

அதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த  ஆஷிஷ் ஷர்மா, கிஷ்த்வார் பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது திருமணம் கடந்த சனிக்கிழமை நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது.ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக கிஷ்த்வாரில் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.


அதன் பிறகு நடந்தவற்றை மணமகன் ஆஷிஷ் கூறுகையில், இந்த நிலையில் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த எங்கள் குடும்பத்தார் எவ்வளவோ முயன்றும் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ பாதுகாப்பு அளிக்க தயாராக இல்லை.
மணப் பெண்ணின் வீடு அமைந்துள்ள பகுதியும், திருமணம் நடைபெற இருந்த சௌகாம் மைதானமும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பதால், அங்கு செல்ல பாதுகாப்புக் கோரினோம். ஆனால் கிடைக்கவில்லை. இது குறித்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் எங்களை தொடர்பு கொண்டனர்.

உங்களுக்கு திருமணம் நடைபெறும் வரை நாங்கள் பாதுகாப்பாக நிற்கிறோம் என்று கூறி, எங்கள் வீட்டில் இருந்து மணப்பெண்ணின் வீடு வரை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் எங்களுடன் வந்து, திருமணம் சிறப்பாக நடைபெற உதவினர்.
திருமணம் நடைபெறும் உணர்வை விட, இஸ்லாமியர்கள் எங்களுக்கு அளித்த பாதுகாப்பினால் பெருமித உணர்வே எனக்கு அதிகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் ஆஷிஷ்.

மேலும், இங்கு வாழும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. பல ஆண்டுகளாக எங்களைப் பிரிக்க நினைக்கும் சக்தியோடுதான் நாங்கள் ஒன்றுபட்டு போராடி வருகிறோம். இதுவே நிதர்சனமான உண்மை என்கிறார் மணமகன் ஆஷிஷ்.                                               

நன்றி :-தினமணி, 15 - 08- 2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.