Monday, August 19, 2013

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) மரணம் !


சென்னை: பிரபல மனோதத்துவ நிபணரும் முன்னாள் நடிகருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியரக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)அவர்கள் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு  சுயமரியாதை சுடராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.

அதன் பின்பு திருக்குர்ஆனை ஆய்வு செய்து அதன் பால் ஈர்க்கப் பட்டு கடந்த  2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இஸ்லாம் மதத்தை தழுவி அப்துல்லாஹ் என்று ஆனார்.

இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.

இஸ்லாத்தை தழுவுவதற்கு முன் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மின்னியவர்.

 பெண் சிசுக் கொலைக்கு எதிரான திரைப்படமான 'கருத்தம்மா' திரைப்படத்தில் இவரின் சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத் தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.