Sunday, July 21, 2013

சென்னையின் உண்மையான "கதாநாயகன்" டிராஃபிக் ராமசாமி

 http://ta.wikipedia.org/ wiki /டிராஃபிக் ராமசாமி http://ta.wikipedia.org/ wiki /டிராஃபிக் ராமசாமி
டிராபிக் ராமசாமி (Traffic Ramaswamy, 
அகவை 75) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்திய பொதுநலசேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை சீர்படுத்துவது இவரது பழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றித் தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.
வாழ்க்கை

இவரது முறையான கல்வி பன்னிரெண்டாம் வகுப்புடன் முடிந்தது. பின்னர் பிரிட்டிஷ் இன்ஸ்ட்டிட்யூட், மும்பை கல்வி நிறுவனத்தில் அஞ்சல்வழி மூலம் துணித்துறையில் AMIE பட்டம் பெற்றார்.[1] ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

பெயர்க் காரணம்

ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதில் உதவி செய்தார். ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார்.                                                             

நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழ்க்குகள் ஏராளம்

டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்.2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுபாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே.

 சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குக் கட்டிடங்களை கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்கள் செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது.

சென்னையில் கட்டப்படும் எல்லாக் கட்டிடங்களும் கார் நிறுத்த வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார்.

இது இன்று தமிழகம் முழுக்க பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி.

இவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

ராமசாமி தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிகளை அவர் கைவிட்டதில்லை.

2000 ஆம் ஆண்டில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.

2002 ல் மீன் விற்பனையாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு பொய்வேறு வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவரது பணிகளுக்குப் பல தடங்கலகள் இருந்தாலும், தொடர்ந்து இயங்க அவருக்கு பொது மக்கள் உதவி புரிகின்றனர்.

உசாத்துணை

    ↑ சென்னை தெற்கு தேர்தல் தகவல்

    Chennai Best, "Battling for the Cause of Chennai Citizens" Retrieved: 9 July 2007
    India eNews, 5 August 2006, "Tamil Nadu funds Periyar film, protester knocks court"’
    IBN Live, January 23, 2007, "This 73-yr-old is largest PIL filer"
    The Hindu, 27 Nov 2006 Online edition of India's National Newspaper
   டிராபிக் ராமசாமி வழக்கு


மேற்கோள்கள்


    ஓர் மனித படை
  
     சென்னையின் உண்மையான "கதாநாயகன்"

    போராட்டம்-டெல்லி செல்ல முயன்ற 'டிராபிக்' ராமசாமி கைது

    கூட்டாஞ்சோறு டிராஃபிக்ராமசாமி

    டிராஃபிக் ராமசாமி நேர்மை    

நன்றி :- தமிழ் விக்கி பீடியா

0 comments:

Post a Comment

Kindly post a comment.