Saturday, July 6, 2013

வீணாகும் விலைமதிப்பற்ற புத்தகங்கள்- ஜீவ. இராம ஸ்ரீனிவாசன்

                                                                                
நூலகத்தில் போதிய வசதியின்மையால்
தரையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்

அண்ணாகிராமம் ஒன்றியம் மேல்குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள நூலகத்தில் உரிய கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் விலை மதிப்பற்ற புத்தகங்கள் வீணாகி வருகின்றன
.
மேல்குமாரமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ள வளாகத்தின் அருகே ஊர்ப்புற நூலகம் உள்ளது.

எம்.சி.தாமோதரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது 1998-99-ஆம் ஆண்டு அவரது சொந்த கிராமத்தில் இந்த நூலகம் கட்டப்பட்டது.

தற்போது 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலை மதிப்பற்ற அரிய பல புத்தகங்கள் உள்ளன. ஆனால், நூலகத்திற்கான கட்டமைப்பு வசதி மற்றும் வாசகர்கள் படிப்பதற்கான வசதிகள் முற்றிலும் இல்லாததால் பயனற்று உள்ளது. அடுக்கி வைக்க அறைகள் இல்லாததால் ஏராளமான புத்தங்கள் தரையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நூலகத்துக்கு மாணவர்கள், பொதுமக்கள் வந்து செய்தித்தாள்கள், வார இதழ்கள் மற்றும் பல்வேறு புத்தகங்களைப் படித்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இருக்கை வசதி இல்லை.

கிராம மாணவர்களிடையே வாசிப்புத் திறனையும், படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், உலகச் செய்திகளையும், தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதற்காகவும் கிராமப் பகுதியில் நூலகங்களை அரசு அமைத்து வருகிறது.

எனவே, புத்தகங்களை பாதுகாப்பாக அடுக்கி வைக்க அறைகள் வசதி, வாசகர்கள் அமர்ந்து படிக்க இருக்கை வசதி செய்து தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி :- தினமணி, 06-0702013

0 comments:

Post a Comment

Kindly post a comment.