Thursday, July 18, 2013

மதுபான விடுதியாக மாறிய ஜே.ஜே. நகர் பஸ் நிலையம் !

சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் 
ஜெ.ஜெ நகர் கிழக்கு பஸ் நிலையம்

சென்னை மாநகரில் வாழ்வோரில் பெரும்பாலோருக்குச் சொந்த வீடு வாங்குவது கடினம். அப்படியே வாங்கிவிட்டாலும் வசிக்கும் பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கெட்டுவிட்டால் நினைத்தபடி வீட்டை விற்றுவிட்டு வேறிடம் செல்வதும் நினைத்துப் பார்க்க முடியாத செயல். வாடகைக்குக் குடியிருப்போரின் நிலையும் அதுதான். காரணத்தை விளக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

அவ்வாறு சுற்றுப்புறச் சீஈர்கேட்டில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள்  முகப்பேரில் அமைந்துள்ள ஜெ.ஜெ.நகர் ( கிழக்கு ) பஸ் நிலையத்தை நம்பி வாழும் மக்கள். நாளொன்றிற்கு 20 பஸ்கள் இங்கிருந்து இயங்கியாக வேண்டும். பயன்படுத்துவோர் எண்ணிக்கையோ 15 ஆயிரத்துக்கும் மேல். கடந்த 20 ஆண்டுகளுக்குமேல் இந்தப் பஸ் நிலையம் முறையாகப் பராமரிக்கப் படவில்லை என்பது கசப்பான உண்மை. குண்டும், குழியும், சேறும், சகதியும் நிறந்த இப்பகுதியில் வண்டிகளை இயக்க சிரமமாக உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்தப் பகுதிக்கு  ஏதேனும் வேலையாக ஒருமுறை சென்றவர்களுக்குக் கூட இந்த உண்மை தெரியும்.

மூதறிஞர் இராஜாஜி பொது இடங்கள் எல்லாம் இரவு முழுவதும் வெளிச்சமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவார். அதன் காரணம் ஜெ.ஜெ. பஸ்நிலையத்தை இரவில் பார்த்தால் நன்கு புரியு.ம். சமூக விரோதிகளுக்கு வாதியாகப் ப்யன்படுகின்றது.மதுபான விடுதியாகவும், கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றது.

தினமணி நிருபருக்கு மதுரவாயில் தொகுதி எம்.எல்.ஏ., பீம்ராவ் கூறியது:-

சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும்,  அரசு நிதியிலிருந்து 28 ல்ட்சமுமாக ரூ.53 லட்ச மதிப்பீட்டில் ஜே.ஜே.நகர் பஸ் நிலையம் 2014-க்குள் புதுப்பிக்கப்படும் என்றார்.

சென்னையில் வாழ்பவர்கள்  சுற்றுப்புற சுகாதார வசதிகளுடன் வாழ்கின்றனர் என்று எண்னும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு
இந்தப்பதிவு விடையளிக்கும்.

அந்தந்தப் பகுதியில் வாழும் மக்களமைப்பு கூட்டம் போட்டு, தீர்மானம் போட்டு,எம்.எல்.ஏ., மாவட்ட ஆளுநர், முடிந்தால் அமைச்சர்பெருமக்கள் ஆகியோரைச் சந்தித்தும், தினசரி மற்றும் வெளிவரும் இலவச வார இதழ்களில் செய்திகளை  இடம்பெறச் செய்தால்தான் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதிமொழி வாங்கிடும் நிலைமையில்தான் வாழ்ந்து வருகின்றோம்.                 

தகவல் உதவி :- தினமணி, 18-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.