Sunday, July 21, 2013

பாழடைந்த வீட்டுச் சுவரில் புதையல்: 70 தங்கக் காசுகள்,119 பவுன்கள் மீட்பு.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பாழடைந்த ஓட்டு வீட்டின் சுவரில் இருந்த புதையலை எடுத்து மறைத்து வைத்திருந்ததாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 70 தங்க காசுகள் உள்பட 119 பவுன் நகைகளை போலீஸார் கைப்பற்றினர்.


கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஓலையூரைச் சேர்ந்த சூர்யா (17), சரவணன் (14) ஆகிய இருவரும் கிட்டி புல் விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது அருகில் இருந்த பாழடைந்த வீட்டின் நடுவே கிட்டி புல் விழுந்தது. அதை எடுப்பதற்காக இருவரும் அந்த வீட்டுக்குள் சென்றபோது வீட்டின் சுவரில் ஒரு மண் கலையத்தில் பழங்கால தங்க நகைகள் இருப்பதைப் பார்த்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனராம்.

இதைத் தொடர்ந்து சூர்யாவின் தந்தை செல்வமும், அவரது நண்பரான மற்றொரு செல்வமும் சேர்ந்து, சுவரில் மண் கலையத்தில் இருந்த 119 பவுன் தங்க நகைகளைச் சமமாக எடுத்துக் கொண்டனராம்.

இது குறித்து கிடைத்த தகவலின்பேரில், ஜயங்கொண்டம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நகைகளை செல்வமும் அவரது நண்பரும் எடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 70 தங்க காசுகள் உள்ளிட்ட 119 பவுன் நகைகளைக் கைப்பற்றினர்.                                                                                                                                 

நன்றி :- தினமணி, 21-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.