Thursday, July 11, 2013

கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள்:!


http://devendrarkural.blogspot.in/2013/06/blog-post_7647.htmlhttp://devendrarkural.blogspot.in/2013/06/blog-post_7647.html

கடந்த 100 ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் (அனைத்தும் ஆங்கில மொழியில் வெளிவந்தவை) இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பட்டியல் கீழே.

1.    Rangila Rasool (ரங்கீலா ரசூல்),  தடை செய்யப்பட்ட வருடம் 1927. ராமாயண  சீதையைத் தரக்குறைவாகச் சித்தரித்து வந்த பிரசுரத்துக்குப் பதிலடியாக, ஆரிய சமாஜைச் சேர்ந்த குமார் பிரசாத் பிரீத்  எழுதியது.

2.    Angaray,  தடை செய்யப்பட்ட வருடம் 1932,  புத்தகத்தை எழுதியவர் ஷஜத் சாகிர்.

3.    Nine Hours to Rama – தடை செய்யப்பட்ட வருடம் 1962. எழுதியவர் Stanley Wolpert. மகாத்மா காந்தி கொல்லப்படும் சமயத்தில், அவருக்குப் பாதுகாப்பு அளிக்க÷ வண்டியவர்கள் எவ்வாறு கவனக்குறைவுடன் இருந்தனர் என்று தெரிவிக்கும் புத்தகம்.

4.    Unarmed victory, தடை செய்யப்பட்ட வருடம் 1963. எழுதியவர் பெர்ட்ரண்ட்  ரஸல். சீனா  இந்தியா  யுத்தத்தைப் பற்றியது.

5.    Understanding Islam through Hadis,  தடை செய்யப்பட்ட வருடம் 1982. எழுதியவர் ராம் ஸ்வரூப்.

6.    Smash & Grab  தடை செய்யப்பட்ட வருடம் 1984. சுதந்தரமாக இருந்த சிக்கிம் பகுதியை இந் தியா எப்படி தன்னுடன் சேர்த்துக்கொண்டது என்பதைப் பற்றிய புத்தகம். எழுதியவர் சுனந்தா தத்தா ராய்.

7.    The Satanic Verses,  தடை செய்யப்பட்ட வருடம் 1988,  எழுதியவர் சல்மான்  ருஷ்டி.

8.    Soft Target  – தடை செய்யப்பட்ட வருடம் 1989. இந்திய உளவுத்துறை எப்படி கனடா  நாட்டில் நுழைந்தது என்பதை விவரிக்கும் புத்தகம். எழுதியவர்கள் Zuhair Kashmeri & Brian McAndrew

9.    Lajja, தடை செய்யப்பட்ட வருடம் 1993  எழுதியவர் தஸ்லிமா நஸ்ரின்.

10.    The true furqan – தடை செய்யப்பட்ட வருடம் 1999  குர்ஆனுக்கு கிறித்துவ  வடிவம் கொடுத்த புத்தகம்  எழுதியவர்கள் Al Saffee, Al Mahdee.

11.    Islam a concept of political world invasion, தடை செய்யப்பட்ட வருடம் 2007  எழுதியவர் R. V. Bhasin.

12.    The Great Soul,  குஜராத்தில் தடை செய்யப்பட்ட வருடம்  2011. எழுதியவர் Joseph Lelyveld  . காந்தி  ஓரினச் சேர்க்கையாளர், இனவெறியர் என்பதாகச் சொல்லும் சில பகுதிகள் இடம்பெற்றன என்னும் குற்றச்சாட்டின்  அடிப்படையில் தடை செய்யப்பட்டது.

13.    Jinnah: India Partition Independence – எழுதியவர்  ஜஸ்வந்த் சிங்  தடை செய்யப்பட்ட வருடம் 2009. குஜராத் அரசு விதித்த தடையை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து  செய்துவிட்டது.

14.    Shivaji: Hindu King in Islamic India  – எழுதியவர் ஜேம்ஸ் லெயின்   மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட வருடம் 2004  இந்திய உச்ச நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.