Tuesday, June 4, 2013

திருக்குறள் சில வரிகளில் சிறப்புத் தகவல்கள !

உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குத்தான் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் ஒரே நூல் திருக்குறள். இதன் மூலமே திருக்குறள் மதச் சார்பற்ற நூல் என்று முடிவு கொள்ளலாம். இவ்வகையில் உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம்.

நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.

விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றும், அதற்குப் பின்னரே திருக்குறள் என்றும் பலர் கூறுவர். விவிலியம் மதச் சார்புடைய நூல் என்பதைக் கணக்கிலெடுத்தால், திருக்குறளே முதலிடம் பெறுகின்றது.

திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளன. “எழுபது கோடி” என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் - 9.

திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம் , குவளை.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்.

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றுமணி

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் “ குறிப்பறிதல்”

திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து, “முறை” - 1705 முறை.

திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ளீ , ங

திருக்குறளில் இடம்பெறாத குறிப்பிடத்தக்க இரு சொற்கள் - தமிழ், கடவுள்       

திருக்குறளின் முதல் பெயர் - முப்பால்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

திருக்குறளின் மொத்த அதிகாரங்கள் - 133

திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 380

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் - 700

திருக்குறளில் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் - 250

எனவே,  திருக்குறளில் உள்ள மொத்தக் குறட்பாக்கள் 1330

ஒவ்வொரு குறளிலும் 7 சீர்கள் அமைந்துள்ளன

திருக்குறளில் மொத்தம் உள்ள இயல்கள் - 13

அறத்துப்பாலில் உள்ள இயல்கள் - 4

பொருட்பாலில் உள்ள இயல்கள் - 7

காமத்துப்பாலில் உள்ள இயல்கள் - 2

திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 14000

தமிழ் எழுத்துக்கள் 247 -ல், திருக்குறளில் 37 எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை.

திருக்குறளை  மூலத்த முதன்முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்.

திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர், மணக்குடவர்

திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்

திருக்குறளின் உரையாசிரியருள் 10 - வது உரையாசிரியர் - பரிமேலழகர்       

 ---------------------------------------------------------------------------------------------------------------

திருக்குறளின் சிறப்புத் தகவல்கள் சென்னைப் பல்களைக்கழக உதவிப்பதிவாளர், திரு. கோதண்டராமன் தொகுத்தது.

தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்க மாத இதழான, மக்கள் நினைத்தால் ..ஏப்ரல்-2013-ல்  அதன் இணையாசிரியர், அர.அ.பெருமாள் பிரசுரித்தது.

53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகட், அம்பத்தூர், 600 053. அ.இர.பெருமாள் 9840497923 

---------------------------------------------------------------------------------------------------------------

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒரே சுதந்திரப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவர் சிறந்த இலக்கியச் செல்வரும் ஆவார். இவ்வுண்மை பரப்புரை செய்யப்படல் வேண்டும். அவரது படைப்புகள் அனைத்தையும் இங்கு குறிப்பிட்டால் கட்டுரை விரியும்.

திருக்குறளின்பால் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட வ.உ.சி.க்கு, அதற்கு உரை எழுதியவர்களோடு பல முரண்பாடுகள் உண்டு. அவர் உயிரோடு இருக்கும் பொழுது குறளில் ஒரு பகுதிக்கு உரை எழுதி வெளியிட்டார். பொருளாதார வசதியின்மை காரணமாக முழு உரையையும் வெளியிடவில்லை. அவர் காலமானபின்பு அவர் எழுதிய முழு திருக்குறள் உரையையும் பாரிநிலையம், சென்னை-1 வெளியிட்டது. அதற்குத் தமிழக அரசின் பரிசும் கிடைத்தது.      
உயிரோடு இருக்கும்பொழுது  எழுதப்பட்டு, காலமானபின், முழுமையான உரையாகத் திருக்குறளுக்கு வெளியானது இஃது ஒன்றுதான் என்பதால், இதுவும் சிறப்புத் தகவலாகப் பதிவு செய்யப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------







3 comments:

  1. பொருட்பாலில் உள்ள இயல்கள் - 3

    ReplyDelete
  2. பொருட்பாலில் உள்ள இயல்கள் - 3

    ReplyDelete
  3. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் - 42,194

    திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

    ReplyDelete

Kindly post a comment.