Monday, June 24, 2013

ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம்: 70ஆவது இடத்தில் இந்தியா !


ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 70ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியர்களின் முதலீடு ரூ.9 ஆயிரம் கோடியாகக் குறைந்துள்ளது. இது ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டினரின் மொத்த முதலீட்டில் 0.1 சதவீதம் மட்டுமே.

முதலீட்டுத் தொகையின் அடிப்படையில் இந்தியா 70ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.14 ஆயிரம் கோடியுடன் 55ஆவது இடத்தில் இருந்தது.

இந்தப் பட்டியலில் பிரிட்டன் ரூ.18.8 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இது மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 22 சதவீதம் ஆகும். பிரிட்டனுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஜெர்ஸி, கியூர்ன்சே, ஜெர்மனி, பிரான்ஸ், பஹாமாஸ், கேமன் தீவுகள் மற்றும் ஹாங்காங் ஆகியவை முறையே முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன 

நன்றி :- தினமணி, 24-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.