Sunday, June 23, 2013

60 லட்சம் பயனாளிகளின் இ-மெயில் முகவரிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன !

சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் சுமார் 60 லட்சம் பயனாளிகளின் தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி சாஃப்ட்வேர் மூலம் முறைகேடாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால், நிதி மற்றும் இதர தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்றும், தவறான நோக்கத்துடன் இவை பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளவர்களுக்குள்ளேயே இந்தத் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்தவரை முயற்சிக்கிறோம்.

தகவலை பாதுகாக்கும் பணியில் வலிமையான குழுக்களை ஈடுபடுத்தினாலும், எந்த ஒரு நிறுவனத்தாலும் இதுபோன்ற முறைகேடுகளை 100 சதவீதம் தடுக்க முடியாது என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது
.
உத்தேசமாக 60 லட்சம் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.                                                        

நன்றி :-தினமணி, 23-06-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.