Tuesday, June 11, 2013

ஓமன் சாண்டிக்கு பசிபிக் பிராந்தியத்தில் பொதுச்சேவை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தியமைக்கான விருது ( 2013 )




கேரள முதல்வர் ஓமன் சாண்டிக்கு பசிபிக் பிராந்தியத்தில் பொதுச்சேவை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தியமைக்கான விருது ( 2013 )


இந்த ஆண்டு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், “பொதுச்சேவையில் ஊழலைக் கட்டுப்படுத்தித் தடுத்தது” எனும் பிரிவில், கேரள முதலமைச்சர் ஓமன் சாண்டி அவர்களுக்கு இந்த விருது, ஐக்கிய நாடுகள் சபையால் அளிக்கப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கேரள முதல்வர்,  தனித் தனியாக ஆயிரக்கணக்கான பொதுமக்களை எந்த அதிகாரிகளின் குறுக்கீடுகளும் இல்லாமல், நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்த்து வருகிறார்.

அவரது குறை கேட்கும் முகாம்களில், பலமுறை விடிகாலையில் மக்களைச் சந்திக்கத் துவங்கி, இரவு வரைகூட நிகழ்வு நீடிக்கிறது. அவரது அமைச்சரவை சகாக்கள் திறமையாகவும், எளிமையாகவும், அன்றாட அலுவல்களைச் செய்வதும், திட்டங்களைத் தீட்டித் தெளிவு படுத்துவதுமாக, கேரள அரசு நிர்வாகத்தில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் காண முடிகிறது.

இதே போன்ற செயல்பாடுகளை, இராஜஸ்தான், பீஹார், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.

நன்றி :-.நாராயணன், ஆசிரியர், பாடம். 98403 93581

EDITOR@PAADAM.IN

WWW.PAADAM.IN
       

0 comments:

Post a Comment

Kindly post a comment.