Saturday, May 18, 2013

விபத்தில்லா நகரமாகுமா சென்னை ? விபத்தில்லாத் தமிழகமே வேண்டும் !


போக்குவரத்து விதி மீறல்: 2 மணிநேரத்தில் 220 வழக்குகள் பதிவு ! 

சென்னையில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக புதன்கிழமை இரவு 220 வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்குகள் 2 மணிநேரத்தில் பதிவு செய்யப்பட்டன.

சென்னையை விபத்தில்லா நகரமாக்குவதற்குப் பெருநகரக் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அவ்வப்போது போக்குவரத்துப் பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், கட்டுப்பாடு இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இச் சோதனை புதன்கிழமை இரவு 9 மணியில் இருந்து 11 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது. 

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 220 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 78 பேர் மீதும், 

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 74 பேர் மீதும்

கட்டுப்பாடு இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாக 17 பேர் மீதும், 

மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றதாக 51 பேர் மீதும் வழக்குப் 

பதியப்பட்டுள்ளன.  

நன்றி :- தினமணி, 17-05-2013

ஓர் விபத்தால் பாதிப்புக்குள்ளானால் என்னென்னவற்றை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும் என்பதை அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று  பார்வையிட்டு தெரிந்தகொள்வது  அவசியமான செயலாகும்.  மரணம் நிகழ்ந்த விட்டால் தொல்லை இல்லை.

அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருந்தால் இரண்டு மூன்று தினங்கள் மயக்க நிலையில் நிர்வாணமாக இருக்க வேண்டியது வரும்.

எலும்புகளை இணைத்திட மெடல் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டுவது அவசியமாகக் கூடும். சிலவற்றில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து எலும்புகள் கூடியபின்  அந்த மெடல் கம்பிகளை எடுக்க வேண்டியதிருக்கு,ம். சிலவற்றில் அவை ஆயுள் பரியந்தம் உடம்பிலேயே இருக்கும். பின்னர் எப்போதாவது வேற எதற்காவது  எக்ஸ்ரே போன்றவை எடுக்க நேர்ந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால்  மெடல் தகடுகள் சிதறுண்டு போகும் வாய்ப்பும் உண்டு.

மாவுக்கட்டு முறையில் சரி செய்து கொள்ளலாம் என்றால், 10-20- நாட்கள்  மாவுக்கட்டுடன்  இருந்தால் ஏற்படும் அரிப்பையும் ஊறலையும்  தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும்.

பச்சிலை. வைத்தியங்கள் என்றாலும்  தொல்லைகள் உண்டு .

முன்னெச்சரிக்கையோடு இருப்பதுதான சரியான முடிவு ?

இத்தனைக்கும் மேல் டாஸ்மாக் வேண்டுமென்றால் வாங்கிச் சென்று  ஓரிடத்தில் தங்கி குடித்துத் தொலையுங்கள்.

அப்பொழுதுகூட வரம்பு மீறினால் இதே நிலைகள எதிர்கொள்ள நேரிடும்.

எதுவுமே இல்லை என்றாலும் குளியலறை  போன்றவற்றில் வழுக்கி விழுந்தாலும் இதுதான் கதி.

வருமுன் காப்பதொன்றுதான் சீரிய நெறி. அப்படி இருப்பவர்களுக்குக்கூட ஏதேனும் சிக்கல்கள் ஏற்படத்தான செய்கின்றன என்கிறீர்களா ?

தொகுப்பூதிய அடிப்படையில் , 4 மணி நேரத்திற்கு ஒரு குழுவினராக,  (  6  X 4 )   ஆறு  குழுக்களாகக் காவல்துறை,  இரவு 9 மணியிலிருந்து   மறுநாள்  இரவு  9  மணி வரை போக்கு வரத்து விதி மீறல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து  அதிரடி சோதனைகளை  நேர்மையான முறையில் செய்யலாமே ! 

பாதுகாக்கும்  பணியில் ஈடுபட்ட காவலர் குழு இலஞ்சம் முதலியவற்றில் ஈடுபட்டால் பிற்காலத்தில் எக்காரணங் கொண்டும் அரசு வேலை தரப்படமாட்டாது என்ற விதியையும் அவசியம் ஏற்படுத்திட வேண்டும்.

சென்னையில் இருப்பவர்களின் உயிர் மட்டும்தான் பாதுகாக்கப்பட வேண்டுமா என்ன ?

தமிழகம் முழுவதும் விரிவு படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் திகழலாமே !

0 comments:

Post a Comment

Kindly post a comment.