Sunday, April 21, 2013

என் - எச் - எம் - ரீடர் -- மொபைலில் தமிழ்ப் புத்தகம் -பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம்.


உலகிலேயே மிகப் பெரிய  மின் புத்தக வனிக நிறுவனமான அமேசான், புத்தகத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஈ.இன்க் என்ற சிறப்புத் தொழில் நுட்பத்தால் உருவான திரைகளைப் பயன்படுத்தி, கிண்டில் ரீடர் என்ற ஹார்ட்வேர் மின் புத்தகப் படிப்பானை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அமேசானிடம் இருந்த ஏராளமான வாசகர்கள் இதனை கிண்டில் ரீடரை மனமுவந்து  எக்கச் சக்கமாக வாங்கிக் கொண்டதால் அமேசான் வெற்றி பெற்றது. அந்தக் கிண்டில் ரீடரில் அமேசானிடமிருந்து காசு கொடுத்து வாங்கும் பக்கங்களை மட்டுமே படிக்க முடியும்.

இதற்கிடையில் தொடுதிரை நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்பெசிகள் பிரபலமாக வரத் தொடங்கின. மிக முக்கியமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களைச் சொல்லலாம். அதேபோல் கூகிளில் ஆண்டிராய்ட் நுட்பத்தைப் பயன்பத்தி, சாம்சங் தொடங்கி, பெயர் தெரியாத எண்ணற்ற சீன , கொரிய நிறுவனங்கள்வரை ஏகப்பட்ட ஆண்டிராய்ட் தொடுதிரை செல்பேசிகளைச் சந்தையில் உலவவிட்டன. இவை அனைத்திலும் மிகப் ப்பெரிய திரை உண்டு, கை விரல்களால் தொட்டி, அசக்கி, நகர்த்தி, கிட்டத்தட்ட ஒரு கணினி போலவே இந்த செல்போன்களைப் பயன்படுத்தலாம்.















ஆப்பிள் இதற்கிடையில் டேப்லட் பிசி வகையைச் சேர்ந்த ஐபேட்  என்ற கருவியை அறிமுகப்படுத்தியது. இதுவும் தொடு திரை வகையைச் சார்ந்த கருவி ஆகும். ஆனால் செல்பேசியைவிடப் பெரிதாக இருக்கும்.  உடனேயே சாம்சங் முதற் கொண்டு பல நிறுவனங்கள் இதேமாதிரியான டேப்லட்டுகளை உருவாக்க ஆரம்பித்தன.

 அமேசான் நிறுவனம், உடனேயே இந்தத் தொடுதிரை செல்போன் அல்லது டேப்லட்டுகளில் தன் மின் புத்தகங்களைப் படிக்கும் வண்ணம் , கிண்டில் ஆப் எனப்படும் கிண்டில் மென்பொருள் செயலிகளை உருவாக்கி வெளியிட்டது.

இது நடந்து நான்கு ஆண்டுகளில்  உலகின் ஒவ்வொரு கோடியிலும் உள்ள எண்ணற்ற மக்கள் ஆங்கிலத்தில் மின் புத்தகங்களைப் படித்துத் தள்ளினார்கள். அமேசானும், அச்சுப் புத்தகங்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் மின் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது. அமேசான் ஆங்கிலம் அல்லது சில மேலை நாட்டு மொழிகளளில் மட்டிமே கவனம் செலுத்தியது.

வேறுவழியற்ற நிலையில் இந்திய மொழிப் பதிப்பாளர்களும் களத்தில் இறங்கினர். அதில் ஒரு முயற்சியாகக் கிழக்கு பதிப்பகம், மார்ச் 2013-இறுதியில், ஆண்டிராய்ட் செல்பேசியிலும், டேப்லட்டுகளிலும் இயங்கக்கூடிய என். எச். எம். செயலியை வெளியிட்டது. கிழக்கு பதிப்பகத்தின் அனைத்து பதிப்புகளையும் விரைவில் இந்தச் செயலி மூலம் தமிழில் படிக்க முடியும். இன்னும் 3 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 500 புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் இம்முறைப்படி படித்திட வழிவகை செய்துவிடுவதாக, தங்களது, அலமாரி மாத இதழ் மூலம், பத்ரி சேஷாத்ரி உறுதி கூறியுள்ளார்.

அலமாரி, இராயப்பேட்டை, 
சென்னை -600 014,
 

 + 91 95000 45611 


0 comments:

Post a Comment

Kindly post a comment.