Sunday, April 14, 2013

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு, தில்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு !

  

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவர் லட்சுமி காந்தன் பாரதி, துணைத் தலைவர் ஆராவமுதன், செயலர் சின்னுசாமி ஆகியோருக்குத் தில்லித் தமிழ்ச் சங்க பொதுச் செயலர் இரா. முகுந்தன் தலைமையில் சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற பாராட்டு விழா

காதி, கிராமத் தொழில்களுக்கான சிறந்த மையமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்க பொதுச் செயலர் இரா. முகுந்தன் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் ப. அறிவழகன் வரவேற்புரையாற்றினார்.                                                                           

தில்லி முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், திருச்செங்கோடு காந்தி ஆசிரம நிர்வாகிகளைப் பாராட்டிப் பேசினார். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவர் லட்சுமி காந்தன் பாரதி ஏற்புரை ஆற்றினார். ஆசிரமத்தின் துணைத் தலைவர் ஆராவமுதன், செயலர் சின்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தில்லித் தமிழ்ச் சங்க இணைச் செயலர் பெ. இராகவன் நாயுடு நன்றி கூறினார்.

2012-ல் சிறந்த காதி மற்றும் கிராமத் தொழில்களுக்கான மையமாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான தேசிய விருது, தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது.                                                      

நன்றி :- தினமணி, 114-04-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.