Sunday, April 14, 2013

இசுரேலைச் சோலைவனமாக்கும் தமிழக வேப்பமரங்கள் ! இசுரேலியர் நமது எள்ளுப் பேரன்கள் !

உலக மொழி, நாகரீகம் மற்றும் பண்பாட்டு அறிஞன் சாத்தூர் சேகரன் அவர்களது இஸ்ரேல் அனுபவங்கள் !

”யாதும் ஊரே யாவரும் தமிழர்” என்பதே சாத்தூர் சேகரன் அவர்களது கோட்பாடு. உலகத்தில் உள்ள மொழிகள் அனைத்துமே தமிழிலிருந்து தோன்றியவை என்று உறுதிபடக் கூறும் இவரது, இஸ்ரேல் கள ஆய்வு.

இசுரேலில் மாற்று முயற்சி


 இசுரேல் ஒரு சிறிய நாடு. அதன் பெரும்பகுதி பாலைநிலமே. பாலஸ்தீனம் என்பதன் பொருள், பாலைதானம் ( தானம்- இடம் ). அற்புதமான இரு தமிழ்ச் சொற்கள் கொண்ட கூட்டுதான் இது. தானம் என்பது தீனம் என்று ஆகிவிட்டது. 
இசுரவேலர்கள் பாலை மணலுடன் பிறவகை மண்களைச் சேர்த்து முதலில் புல் வளர்க்கிறார்கள். வேறு சில செடிகளையும் வளர்க்கிறார்கள். அவை மண்ணில் உள்ள உப்புச் சத்தைக் குறைக்கின்றன. பின்னர் பழவகைச் செடிகளையும் மரங்களையும் வளர்க்கின்றனர். பாலை மணலில் 30-40% மண் சேர்ப்பதால் தாவரங்களுக்கு வேர் பிடிமானம் கிடைக்கிறது; சத்துப்பொருளும் கிடைக்கிறது.

புல் பூண்டு வளர்ந்த பின்னர், உலகின் பல நாடுகளில் இருந்தும் 1200 பல்வகை ம்ரங்களைக் கொண்டு பாடுபட்டு இசுரேலியர் வளர்த்துள்ளனர். 1199 மரங்களும் வளராமல் போய்விட்டன. ஆனால் தமிழ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வேப்ப மரம் ஒன்றுதான் வளர்ந்தது. இசுரேல் நாட்டின் பாலைமண்ணின் தன்மையைப் போக்கிட வேப்பமரமே மருந்தாக மாறியது. இன்று இசுரேலில் பல்லாயிரக்கணக்கான வேப்பமரங்கள் வளர்ந்துள்ளன. ஒட்டகங்களுக்கு இவை நல்ல தீனியாகின்றன. இசுரேலின் பாலை நாட்டை மற்ற நாட்உகளுக்கு இணையாக்குகிற அரிய மரம்தான் வேப்பமரம். 
இவ்வளவு தகவல்களையும் இசுரவேல் அதிகாரி ஒருவட் ஆவலுடன் கூறுகின்றார் , நமது தமிழ் மொழி ஆய்வாளர், சாத்தூர் சேகரன் அவர்களிடம்...   .   

சேகரன்  அந்த அதிகாரியிடம் ,. “ தமிழ் மொழிக்கும் உங்கள் மொழியான ஹிப்ரு மொழிக்கும் தாய் மொழி- கிளை மொழி உறவு உள்ளது. அல்லாமலும் நீன்ஹ்கள் தொன்மைத் தமிழரின் கால் வழியினரே. உங்கள் இரு பல்கலைக் கழகங்களில் இவைபற்றி உரை நிகழ்த்தியிருக்கின்றேன். மேலும் எனது ஆங்கில நூல்களையும், அருட் செல்வர் நா. மகாலிங்கம் அவர்களது நூல்களையுக் உங்கள் பல்கலைக் கழகங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன் “ என்றார்.
”மிக்க நன்றி ஐயா- ஹிப்ரு- தமிழ் உறவு பற்றி சில எடுத்துக்காட்டுக்களைக் கூறினீர்கள். நாங்கள் உங்கள் கொள்ளுப் பேரன்கள், எள்ளுப் பேரன்கள் என்ற கூற்று என்னைக் களிப்படையச் செய்கிறது.? என்று அன்புடன் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------------------

தமிழில் அகரமாக உள்ள சில சொற்கள் மேற்கு நாடுகளில் இகரமாக ஆகிவிடுகின்றன.

எடுத்துக்காட்டு :- அது -id ( id ) : இலத்தீன்,  it ( இற் ) : ஆங்கிலம்

தமிழில் இகரமாக உள்ள சில சொற்கள் மேற்குநாடுகளில் அகரமாக மாறிவிடுகின்றன.

எடுத்துக்காட்டு :- சிறை ( பக்கம் ) - Side ( சரியான உச்சரிப்பு ‘சிடை’ தான் ஆனால் தவறுதலாக ) சய்டு : ஆங்கிலம்

                உண்டு - sind: வேறு சில மொழிகள்

விதிவிலக்கு :-  ( எறும்பு ) அந்து - ant ( எறும்பு ) ஆங்கிலம்.
                      
                           இது -id இலத்தீன்
                                    - it ஆங்கிலம் 
இவை சாத்தூர் சேகரனின் கண்டுபிடிப்புக்களின் ஒரு துளி.  
---------------------------------------------------------------------------------------------------------------

உலக நாகரீகங்கள் அனைத்தும் தமிழன் படைத்தவையே !

குமரிக்கண்டம் உண்மையே 
பக்கம் 28 & 29

சாத்தூர் சேகரன்

பன்னாட்டு மொழி மையம் ( பதிப்பகம் )
சென்னை 600 001 & சாத்தூர்- 626 203

விலை ரூ.150/-  236 பக்கங்கள்

WWW.Sathursekaran.com

9442956769
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Kindly post a comment.