Tuesday, April 9, 2013

யாளி இரண்டாம் பதிப்பு ! நம் வலைப்பூ பதிவு அணிந்துரை பக்கம் வாசகர் கருத்தாக !

.
தினத்தந்தி, 16-02-2011 
...............இந்த யாளியும் பேசப்படும் அளவிற்கு கற்பனை, அறிவியல், வரலாறு, சமூகம் கலந்து வித்தியாசமான நாவலாகப் படைத்திருக்கிறார் நாவலாசிரியர்
                                                                                                                     

தினமணி, 27-03-2011

..............உயிர் பன்மை சூழலியலில், யாளியின் இடம் என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பும் சற்று வித்தியாசமான நாவல்.

தினமணி - திருநெல்வேலி -  08-07-2011 
 கற்பனை, வரலாறு, அறிவியல், சமூகம் எனப் பல்வேறு பரிணாமங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட சுவாரஸ்யமான இந் நாவலின் முடிவில், ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்தைத் தந்திருப்பது வரவேற்கத்தக்கது. யாளியைப் படிக்கலாம்; இரசிக்கலாம்; சிறிதுநேரம்  ஆய்விலும் ஈடுபடலாம்.

“யாளி”  க்கு வாசகர்களின் விமர்சனங்களில் சில
  
திரு. ச.இராமசாமி

வலைப்பூ முகவரி : rssairam.blogspot. in / மின்னஞ்சல் :  rssairam99 @ gmail.com

“யாளி” உயிருடன் உள்ளதென்று சொல்லும் நாவல்
 
செந்தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் எல்லாம் கலை வண்ணம் நிறைந்த சிலைகள் பலவற்றைக் கண்டு இரசிக்கலாம். அவற்றுள் யாளியும் ஒன்று.

யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம். ஆனால் வெளியே எடுக்க முடியாது. யாளி சிலைகளைக் காண்போர் பார்த்து இரசித்துவிட்டுத் திரும்பி விடுவர். ஆனால். மணிதணிகைகுமார் என்னும் இளைஞருக்குக் கற்பனை சிறகடித்துப் பறந்தது. பிறந்தது, யாளி என்னும் புதுவகையான நாவல்.

இத்தகைய கருப்பொருளுடன் கூடிய புதினம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்று துணிச்சலுடன் சொல்லலாம். ஏனெனில் நூற்றாண்டுக் காலமாகக் கோயில்களும் இருந்து வருகின்றன. யாளி சிலைகளும் இருந்துள்ளன. இவருக்கு ஏற்பட்ட தாக்கம் வேறு எந்தப் படைப்பாளிக்கும் ஏற்படவில்லை என்பதே இவரது சிறப்பு. மேலும், இதனைப் படிக்கும்பொழுது கூடவே ப்யணிக்கும் உணர்வினையும் தன் எழுத்து வன்மையால் ஏற்படுத்திவிடுகின்றார், நூலாசிரியர். படித்து முடித்தபின், சில நாட்கள் இரவில் யாளிகள் என் கனவில் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருந்தன.

பல நூற்றாண்டுகள் பூட்டிய அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் வெளிப்பட்டதுபோல், காலம் நேரம் வரும்பொழுது இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவரும் யாளிகளும் உயிருடன் வெளிவரும் என்ற நம்பிக்கையை விளைவிக்கின்றது இந்த நாவல்.

அங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உரியவர் பார்வையில் பட்டால் டைவோசர், அவெகொண்டா போன்ற திரைப்படமாகக் கூட யாளி வெளிவரக்கூடும். இந்தக் குறையையும் நீல்லிவிட்டார் படைப்பாளியின் நண்பர், எஸ்.டி.பால யோகேஸ்வரன். ஆம். எட்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் கதையின் சுவை குன்றாமல் மொழி பெயர்த்துள்ளார். அது இந்த நாவலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

குறை என்று சொல்லப்போனால் , யாளிகளை இரகசியமாகப் பாதுகாக்கும் கொயில் குடும்பத்தைச் சேர்ந்த பெண், கதாநாயகனான வெள்ளைக்காரரைக் காதலிப்பது வலியத் திணிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.

சீறுபுலி யானயாளி சிங்கமுதலாய்ச்
சிற்றடிக்குக் குற்றவேல் செய்யச் சொல்லுவோம்
வேறிபெருங் கடவுளை எங்களுடனே
விளையாடச் செய்குவோமென்று ஆடுபாம்பே. - பாம்பாட்டிச் சித்தர்    

Moorthy

kamoorthy@gmail.com


..............There will be a place for you in Tamil history. May be you are not yet identity. But your hard work will never fail. Thans a lot for providing such a wonderful book.  

R.K.Abhiram

rkabhiram@yahoo.com

........................................ Please contact a film director and try to take this super novel as a film in a hollywood manner.  

Naga Lakshmi  

nagbar204@yahoo.com

I am doing research on this Topic.
I did not study even the first page but I had finshed munnurai and a glance at all pages.  


டாக்டர் திருமதி. மஞ்சுளாதேவி ஹரிஹரன்
9442123866

...............................தொடர்ந்த எழுத்துநடைப் பயிற்சியால் வளமாக நடையை உள்ள எழுத்தாளர் கூட்டத்தைவிட அறிவியல் பார்வை மிக்க தணிகைகுமார் போன்றவர்களின் படைப்புகள்தான் இன்றையத் தமிழ்ச் சூழலுக்குத் தேவை.  



இ.சுதாகரன்

98944 69198

...................... ஒரு சினிமாவுக்குரிய எல்லாத் தகுதிகளும் உள்ள நாவல் ”யாளி”. விடாமல் முயலுங்கள். திரையில் படமானால் “யாளி”-இன் வெற்றி பிரம்மாண்டமாக இருக்கும், அதன் உருவத்தைப்போல..




 Mani Thanigaikumar, B.E.

tomanithanigai@gmail.com

cell :- 94431 77764

எல்.கே.எம். பப்ளிகேஷன்

044- 24361141   /044/ 24340599

99406 82929


0 comments:

Post a Comment

Kindly post a comment.