Thursday, April 18, 2013

மும்பையிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தாராவி !



 2011- கணக்கெடுப்பு, இந்தியாவின் அசிங்கமான  அடிவயிற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்திய மக்கள் தொகையில் 17 விழுக்காடு  வாழத் தகுதியற்றது என ஒதுக்கும் கேவலக் குடியிருப்புகளில் வாழ்ந்து சாகின்றனர் என்று அது சொல்கிறது. புள்ளி விபரங்கள் உண்மையை உணர்த்திவிடுவதில்லை.

புரியும்படிச் சொன்னால் 40 கோடி நகர்ப்புற வாசிகளில் 6.8 கோடிப் பேர்  வார்த்தைகளால் உணர்த்த முடியாத சேரிகளில் வாழ்கிறார்கள். .   மும்பை, கல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரூ என ஐந்து பெரு நகரங்களின் 1.7 கோடிப் பேர் சேரிவாசிகள்.

இவர்களின் தினசரி வாழ்க்கையைக் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்ப்போம். 68 லட்சம் சேரிவாசிகள், இதில் 43 விழுக்காடு  மக்கள் வெளியிலிருந்துதான் குடிநீர் கொண்டு வரவேண்டும். 37 விழுக்காடு  மக்களுக்குச் சாக்கடை வசதி இல்லை. 50 இலட்சம் குடிசைகளில் 250 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். நகர்ப்புறச் சேரிகளில் 25 விழுக்காட்டினருக்கு இன்னும் விறகடுப்புகள்தான். 310 இலட்சம் பேருக்கு , வங்கி என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் 63 விழுக்காட்டினரிடம் செல்போன் உண்டு. பத்தில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் உண்டு.

இது நகர்ப்புற வறுமையின் பிரதிபலிப்பு. இந்திய அரசின் கொள்கைக் குளறுபடியின் படப்பிடிப்பு. இந்தியா சேரி எனும் அவனானத்தை ஆரம்பம் முதலே அங்கீகாரம் செய்துவிட்டத். 2011 கணக்கெடுப்பின்படி 10 விழுக்காடு சேரிவாசி சொந்த வீடு உள்ளவர்கள். இந்த உரிமை யாவும் அரசு புறம்போக்கு, தனியார் நிலம், நகராட்சிக்காலியிடம்  ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகள், இது இரகசியமல்ல.  ஓட்டு வங்கிச் சேரிகள் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதமும் பெற்றன.வாக்கு வருமென்றால், சட்ட விரோதம் கூட சட்ட  அங்கீகாரம் பெறும். சதுர அடி பல ஆயிரங்கள் விலை. சட்ட அங்கீகாரம் பெற்ற சட்டத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புகளைப் பின்னர் இலட்சங்களைப் போட்டு  புதுப் பணக்காரர், நடுத்தர வர்க்கம் நாளை சொந்தம் கொண்டாடும்.           

குறிப்பிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற சேரிகள் என்பன, பொது இடத்தை விழுங்கும் கொள்ளைக் கும்பலின் சொத்து.

சேரிலள் இந்தியாவுக்கு மட்டிமான சிறப்புப் பிரச்சனையல்ல. உலகம் முழுவதும் வேலைதேடிவரும் கிராமத்து மக்களின் புகலிடம் சேரிகளே. ஏறத்தாழ மிக்க மலிவுக் கூலிகளின் உறைவிடம் இது. 1991-2001- க்குள் 198 இலட்சம் கிராமத்து மக்கள்  பிழைப்புத்தேடி நகரங்களில் வந்து குவிந்துள்ளனர். 50 இலட்சம் வேலை வாய்ப்பிகளே கிராமங்களில் உண்டாக்கப்பட்டுள்ளன என்கிறது இந்திய அரசு.

உருவாக்கும் வேலைவாய்ப்பு என்பது மக்களுக்குத் தரும் வருமானம், எரிபொருள் தேவை, வாழ்விடத் தேவை என அனைத்தின் கூட்டு.

சிங்கப்பூரும், ஹாங்காங்கும் ஏழை மக்களுக்கான பொது வாழ்விடங்களை எப்படி உருவாக்கி வளர்ச்சியைச் சீராக்குவது என்பதற்கான நல்ல உதாரணங்கள்.

அறிவுள்ள பொருளாதார வளர்ச்சி, வாழ்விட மேம்பாட்டுடன் தன்னை இணைத்துக் கொள்ளும், வாழ்விடத்தேவை ஏற்பாடு என்பது வளர்ச்சிக்கு முன் நடக்க வேண்டிய முன்னேற்பாடு என்பது நம் நாட்டின் வளர்ச்சியாளர்களின் சிந்தனைய எட்டவே இல்லை. நமது கேடு கெட்ட வளர்ச்சியின் அடையாளமாகச் சேரிகள் உள்ளன.      

ஆயத்தத் தீர்வுகள் ( Ready made solution )இந்தியாவுக்கு உதவக் கூடும். ஆனால், இந்தியா குளறுபடியே செய்துள்ளது. இந்திய அரசு தெரிந்தே அரசியல் சேரிகளை உருவாக்கி வளர்த்துள்ளது. சண்டிகார் தவிர இந்தியா தனது 65 ஆண்டுகால விடுதலையில் தனது ஏழை மக்களுக்கு மதிப்பிற்குரிய வாழ்விடத்தை எங்குமே உருவாக்கித் தரவில்லை. நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம் எனும்  கேடு கெட்ட  சட்டம் பேரழிவை வளர்த்து,
நிலக் கொள்ளையர்களையும், அரசியல் திருடர்களையும் வளர்த்து
கள்ள வணிகத்தையுமே வளர்த்துள்ளது. மக்களுக்கான வாழ்விடம் பற்றிய ஒரே உருப்படியான திட்டமான இராஜீவ் ஆவாஸ் யோஜ்னா கூடக் காட்சிப் பொம்மையாகவே உள்ளது,              

பொது மக்களின் வீட்டுக்கான உருப்படியான திட்டம் 2013-இல் கூட உருவாக்கப்படவில்லை. 12, வது ஐந்தாண்டுத் த்ட்டம் , இந்தியாவின் தேவைகளை முறையான கவனத்துடன் நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம், வருமான உயர்வு ஆகியன மக்களின் நாகரீக வாழ்வுக்கான குடி நீர், போக்குவரத்து, சாக்கடை ஆகியவற்றின் தேவையை வலியுறுத்துகிறது.

குறந்த வருமானம் கொண்டோருக்கான வீடுகளின் தேவை, 5 முதல் 7 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா தொடர்ந்து இதே பாதையில் பயணிக்குமானால், நகர்ப்புற வசதிகள் மிக மோசமாகிப்போய்விடும். நகரம் தனது அடிப்படை உய்ர்ப்பிக்கான ஆதார வசதிகளின்றிப் போய்விடும்.

சோதனைகள், பிரார்த்தனைகள் எத்தனை இருந்தபோதும் உருப்படியான மாற்றத்திற்கான தீர்வுகள், திட்டங்கள் எதுவுமில்லை. சிதைந்து கிடக்கும் நகர்ப்புற வளர்ச்சியைச் சீர்ப்படுத்தத் திட்டமில்லை. இனிவரும் 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 120 இலட்சம் மக்கள் புதிதாக நகரங்களில் வந்து குவிவர் என்கின்றனர்.

இந்திய அரசியல் வர்க்கம் ஏழைகளுக்கான தேவை குறித்துக் கவனம் செலுத்த வேண்டுமென பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் என்ன  செய்யப் போகிறது ? மற்றொரு இந்தியா இத்தகைய இழிநிலையில் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது.  
.
10 கோடி கிராமப்புற மக்கள் பிற்கூரைக்  குடிசைகளில் வாழ்கின்றனர். 30 விழுக்காடு வீடுகளில் வாழும் 22 கோடி மக்களின் தண்ணீர் ஆதாரம் 500 மீட்டர் தொலைவு சென்றே பெற வேண்டியதுள்ளது. நகர்ப்புறத்தில் 100 மீட்டர் நடந்தாக வேண்டும். 65 ஆண்டுகால விடுதலைக்குப் பின்னரும், 40 கோடி மக்கள், மின்சாரம் காணாதவர்களாகவே வாழ்கின்றனர். மண்ணெண்ணெய் விளக்கே அவர்களின் ஒளி மூலம். 65 கோடி மக்கள் தினமும் அதிகாலையில் தெரு ஓரத்தையே கழிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவை வடிவமைத்தவர்கள் நாட்டின் நல்லாட்சிப் பொறுப்பிலளை மத்திய அரசு, மாநில அரசு என இரண்டிடமும் பகிந்தளித்தனர். காலப்போக்கில் மத்திய அரசு மூல வளங்கள், நிலம் பற்றிய கொள்கைகளை முடிவு செய்தது. மாநில அரசின் பணிகளையும் மத்திய அரச்சு எடுத்துக் கொண்டது. கடைசியில் எல்லோருக்கும் பொறுப்புண்டு.

ஆனால், எவரும் எதையும் செய்யமாட்டார்கள் என்ற நிலைதான் மிச்சமானது. பயனற்ற இந்த அமைப்பு கலைக்கப்பட ண்டும். மத்திய அரசு தனக்கு இயலாத துறைகளை மாநிலங்களுக்குக் கொடுத்துஹ் தனது கடமைகளை மட்டும் ஒழுங்காகச் செய்ஹால் போதும்.

”நடக்கும் பாதை தவறானால்
 புறப்பட்ட இடத்திற்கே திரும்புவாய்”   


- என்ற லாடூவின் அறிவு மொழியை நமது அரசுகள் உணர்ந்து, அவரவர் கடமைகளைப் பொறிப்புடன் செய்தால், இந்தியா உலகின் பெர்ம் சேரி என்ற பெரும் பழி தீரும்.

மூலம் சங்கர ஐயர், Accidental India" எனும் ஆங்கிலப் புத்தக ஆசிரியர்.

குன்றா வளர்ச்சி அரசியல் மாத இதழ், ஏப்ரல் மாத இதழுக்காக 


தமிழாக்கம்  செய்தவர் மருத்துவர் ஜீவா.

editor@paadam.in
 

www.paadam.in
.
ஆசிரியர்:- அ.நாராயணன் ( 98403 93581 )


”தாராவியில் வாழ்கிறது ஒரு ஹாங்காங்” என்ற ஏப்ரல் மாத மொழியாக்கக் கட்டுரை, தாராவியை மட்டும் தெரிந்தவர்களுக்கு, ஹாங்காவிலும் ஹாராவியைப் போன்று சேரி ஒன்று இருக்கிறஹு என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கும்.

பிரான்ஸ் நாட்டு 6.5 கோடி மக்களும், ஹாங்காவின் 75 இலட்சம் பேரும் தாராவியின் அசிங்கச் சேரிகளில் வாழ்வதாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன ? கட்டுரையாளருக்கு அந்தந்த நாட்டின் மக்கள் தொகை தெரிந்திருக்கின்றது என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரும், ஹாங்காங்கும் ஏழை மக்களுக்கு  எந்த வகையில் உதவி செய்கின்றன என்பதை எடுத்துரைக்கவில்லையே ஏன் ?

பயனற்ற இந்த அமைப்பு கலைக்கப்படவேண்டும் என்று கூறியபின், அவர்களிடமே கோரிக்கைகளை வைப்பதன் அர்த்தம் என்ன ?


கேவலக் குடியிருப்புகளில், அசிங்கச் சேரிகளில், கேடுகெட்ட வளர்ச்சியின்,  என்பன போன்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் கட்டுரையில் படித்தபோது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றமே கிட்டியது.
எனவே, மேற்கண்ட, கட்டுரையில் இடம் பெற்றவைகளை மட்டும் நீக்கிவிட்டு

மும்பையிலிருந்து கல் எறியும் தூரத்தில்தான் தாராவி”

( தலைப்பும் இரவல்தான் ) rssairam.blogspot.com வலைப்பூவில்

பாடம் இணையதளம், ஆசிரியர் பெயர் தொலைபேசி எண்,

ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரியுடனும்,

18-04-2013-தேதியில் மீள்பதிவிடப்படுகின்றது.

 

1 comments:

  1. நகரத்தில் நரகம் ! நரகத்தில் நகரம்! தவிர்க்க முடியாது.

    ReplyDelete

Kindly post a comment.