Thursday, April 18, 2013

"மேற்குத் தொடர்ச்சி மலையின் 60 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் வளர்ச்சிப் பணிகள் கூடாது' !

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலப்பகுதியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான செயல்பாட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் முன், கஸ்தூரிரங்கன் குழுவினர் புதன்கிழமை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மலையை நம்பி வாழும் மக்களைத் தவிர்த்து சுற்றுச்சூழல் சார்ந்த வளர்ச்சியை எட்ட முடியாது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் 37 சதவீத நிலப்பரப்பைச் சூற்றுச்சூழல் ரீதியில் பாதுகாக்க வேண்டிய பகுதியாகும். இந்தப் பகுதியானது, 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பாக குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை, உயிரியல் ரீதியான புதையல். அதுவே அதற்கு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, அதன்மூலம் பயன் பெறுவதை விட அதனை பாதுகாப்பது முக்கியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுள்ள அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று ஜெயந்தி நடராஜன் உறுதியளித்தார்.                                                                          
 
நன்றி :- தினமணி, 18-04-2013                                                                   



0 comments:

Post a Comment

Kindly post a comment.