Friday, April 12, 2013

ஏமாந்த சீன விவசாயி, அமெரிக்காவில் துப்பறிவாளரான உண்மைக் கதை திரைப்படமாகிறது !

                              சீன விவசாயி ஒருவரின் ஊக்கமளிக்கும் கதை !

http://tamil.cri.cn/301/2013/04/12/1s127149.htm

38 வயதான ZHAO WEI, சீனாவின் ஷான்சி மாநிலத்தின் விவசாயியாக இருந்தார். 16 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வாழ் சீன வர்த்தகர் ஒருவர், நிறுவனம் ஒன்றின் பங்குதாராகச் சேர்ப்பதற்காக,ZHAO WEI யை அழைத்தார். பிறகு, அந்த வர்த்தகர்ZHAO WEI  யிடமிருந்து மூன்று லட்சம் renminbi யுவானை  வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டுத், தப்பிச் சென்றார்.

அந்த வர்த்தகரைத் தேடி, பணத்தைத் திரும்பிக் கொடுக்கச் செய்யும் வகையில், சீனாவிலிருந்து ZHAO WEI அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது, ஆங்கில மொழியைச் சிறிதளவு கூடப் புரியாத நிலையிலிருந்த ZHAO WEI
முழு முயற்சியுடன் போராடி, இறுதியில், அமெரிக்காவில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றியோரைத் தேடித்தந்து மக்களுக்கு உதவி செய்யும் ஒரு தனியார் துப்பறிவாளராக மாறினார்.

2012ஆம் ஆண்டின் இறுதியில், கனடாவில் சீன-கனடிய திரைப்பட நாடகப் போட்டி நடைபெற்றது.ZHAO WEI- -இன் கதையின்படி எழுதப்பட்ட நாடகம், அப்போட்டியில் மூன்றாம் இடத்தை வகித்தது. 

இறுதியில், அமெரிக்கா, கனடா, சீனா ஆகிய மூன்று தரப்புகளும் இணைந்து, சீன விவசாயி ZHAO WEI தனியாக அமெரிக்காவில் உழைத்துப் போராடி, கடன் வாங்கியவர்களை கண்டு பிடித்துத் தரும் உண்மைக் கதையத்  திரைப்படமாக உருவாக்கும் என்பது தெரிய வருகிறது..

நன்றி :- மலர்ச்சோலைம் சீன வானொலி இதழ்

0 comments:

Post a Comment

Kindly post a comment.