Friday, April 12, 2013

102 வயதான முதியவர் புகைப் பிடிப்பதை நிறுத்துவதன் தகவல் -மலர்ச்சோலை

படத்தில் உள்ள நபர் வேறு. கூகிள் உதவி.

சீன இணைய இதழ் மலர்ச்சோலையிலிருந்து எடுக்கப்பட்ட  தகவல்

102 வயதான முதியவர் க்ளாரா கௌல் அம்மையார், புகைப் பிடிப்பதை நிறுத்த விரும்பினார். முன்பு, அவர் தையற்காரராக இருந்தவர். 1931ஆம் ஆண்டு, அவர் புகை  பிடிக்கத் துவங்கினார். நாள்தோறும், அவர் 2-3 சிகரெட் பிடிப்பார். இது வரை, மொத்த 60 ஆயிரம் சிகரெட் பிடித்துள்ளார்.

தற்போது, அவர் குடும்பத்தினர்களின் ஆலோசனையின் பேரில், புகை பிடிப்பதை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். அதற்குக் காரணம், புகை தீ விபத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.

புகைப் பிடிப்பது, விஸ்கி மதுவகையைத் தேனீருடன் கலந்து குடிப்பது, பாடுபட்டு வேலை செய்வது, வறுமையான வாழ்க்கை ஆகியவை, அவர் நீண்ட ஆயுளடன் இருப்பதற்கான காரணமாகும் என்று அவரின் 69 வயதான மகள் லிண்டா ஃபௌலர் தெரிவி்த்தார்.

101 ஆவது பிறந்த நாள் விருந்தில், அவர் ப்ளாக்பூர் டவர் என்னும் நடன அரங்கில் நன்றாக நடனம் ஆடினார். மக்கள் அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.

அவருக்கு 4 குழந்தைகள் உண்டு. போர் காலத்தில், அவர் குழந்தைகளைத் தனியாக வளர்த்திருக்கிறார். அதேவேளையில், அவர் படைக்கலங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தார். அப்போது, நாள்தோறும் 5 அல்லது 6 மணிக்கு, அவர் குழந்தைகளைக் குழந்தை காப்பபகத்தில் விட்டுத் தொழிற்சாலைக்குச் செல்வார் என்று அவரின் மகள் வேள்ரி குறிப்பிட்டார்.

நன்றி சீன வானொலி இதழ் மலர்ச்சோலை

0 comments:

Post a Comment

Kindly post a comment.